Browsing: அரசியல்

எம்.எல்.ஏ பதவிக்கு ரூ.1 கோடி பேரம்?.. கே.பி.முனுசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு..!

சென்னை: கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி. முனுசாமி ரூ.1 கோடி பணம் கேட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புகார் தெரிவித்துள்ளது. ஆடியோவை வெளியிட்டு கிரீன்வேஸ் சாலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது; 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டார். கே.பி. முனுசாமி ஆடியோ தான் இப்போது வெளியிட்டுள்ளேன்; அமைதியாக இல்லை என்றால் வீடியோவையும் வெளியிடுவேன். கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம் தான். இரு அணிகளும்…

அனுமதியின்றி வைக்கப்பட்ட 14 தேர்தல் பணிமனைகளுக்கு சீல்: அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்ட 14 தேர்தல் பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பறக்கும் படை, வாகன சோதனை, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல்…

அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஈரோடு: அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் ரூ.454கோடி செலவில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் கூறினார். Source link

சொல்லிட்டாங்க…

* கவர்னர் ஆன பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டியது அவசியமான ஒன்று. – பாஜ மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்* அதானி குழுமத்தின் மோசடி புகார் குறித்து நியாயமாகவும், எந்த தயக்கமும் இன்றி விசாரணை நடத்த வேண்டும். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளில் வருமானவரித்துறை மூலம் சோதனை நடத்துவது ஒன்றிய பாஜ அரசின் தேர்தல் கொள்கை சிஸ்டமாக உள்ளது. – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி* எதிர்க்கட்சிகள் அரசின்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேர் போட்டி: கூடுதலாக 1,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைப்பு.! முன்னேற்பாடு பணிகளை தேர்தல் அலுவலர் ஆய்வு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக கூடுதலாக 1100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட பிரதான அரசியல் கட்சிகளான திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.…

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 5, 6, 7, 10, 11, 12ம் தேதிகளில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். Source link

தோல்வி பயத்தால் அதிமுக அவதூறு பரப்புகிறது: முத்தரசன்

சென்னை: தோல்வி பயம் காரணமாக திமுக கூட்டணி கட்சிகள் மீது அதிமுக அவதூறு பரப்புகிறது என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  இந்திய கம்யூ. கட்சி மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு சேவை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அதானி குழும விவகாரம் பற்றி ஈபிஎஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் கூட பெற மாட்டார் எனவும்…

வட மாநில தொழிலாளர்களை கண்காணிக்க: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: வேலை தேடி தமிழகத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெரும்பாலும் நடைபெறும் கொள்ளை சம்பவங்களில் வட மாநிலத்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களை தமிழக அரசும், காவல்துறையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் மீது குற்ற வழக்குகள் ஏதாவது பதிவு…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம்.! இன்று மாலை கே.எஸ்.அழகிரி வாக்கு சேகரிக்கிறார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக தேர்தல் பணிக்குழுவில் உள்ள 32 திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்குச் சேகரிப்பில்…

77 வேட்பாளர்களுக்காக கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என பிரிக்கப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 286 கட்டுப்பாட்டுக் கருவிகள், 310 விவிபேட் இயந்திரங்கள் ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது, 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. எனவே கூடுதலாக…

1 21 22 23 24 25 161