Browsing: அரசியல்

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது..!!

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் 1,430 வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது. தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. Source link

ஈரோடு: நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஈரோடு: இன்று காலையில் நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு 44வது வார்டு காந்திஜி சாலை ஓடைப்பள்ள பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்தனர். அப்போது அப்பகுதியில் குடியிருக்கும் அருந்ததியர் சமூக மக்கள் தடுத்து நிறுத்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். சீமான் எப்படி எங்களை வந்தேறிகள் என்று சொல்லலாம் எங்களை வந்தேறிகள் என குறிப்பிட்டுவிட்டு எங்களிடம் எதற்காக ஒட்டு கேட்டு வருகிறீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்தனர். சீமான் கூறிய கருத்தை திரும்ப பெறுவதுடன் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறினர்.…

அதானியின் அசுர வளர்ச்சிக்கு மோடியின் ஆதரவே காரணம் பாஜவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுவதை யாராலும் தடுக்க முடியாது: தெலங்கானா முன்னாள் காங்கிரஸ் தலைவர் பேட்டி

சென்னை: தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு நேற்று வந்தார். அவருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், ரஞ்சன் குமார் மற்றும் நிர்வாகிகள் ஜெயம் ஜெ.கக்கன், ரஞ்சித்குமார் உள்பட பலர் அவரை வரவேற்றனர்.அப்போது, உத்தம் குமார் ரெட்டி கூறியதாவது: பல ஆண்டுகளாக அமலாக்கப்பிரிவு,…

சொல்லிட்டாங்க…

* 12 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு பாஜ அரசு தீங்கு விளைவித்துள்ளது. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே* ஜனநாயக நாட்டில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதே பெரும் மதிப்பு ஆகும். – மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே* பிரதமர் மோடியின் ‘இந்து ராஷ்டிரா’ மகாத்மா காந்தியின் கொள்கைக்கு எதிரானது. இதை முன்னிறுத்துவதன் மூலம் பாஜ இந்தியாவை அழிக்க முயல்கிறது. – பீகார் முதல்வர் நிதிஷ்குமார்* தமிழ்நாடு அரசே பருத்தியை…

ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்: உத்தவ் தாக்கரே

டெல்லி: ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என உத்தரவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக உத்தரவ் அறிவித்துள்ளார். மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற பாஜக எதை வேண்டுமானாலும் செய்யும் எனவும் தேர்தல் ஆணையத்தின் முடிவு அப்பட்டமான ஜனநாயக படுகொலை எனவும் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். Source link

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பெண் வாக்காளர்கள் எதிர்ப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பெண் வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தென்னரசு செய்து தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். பெண் வாக்காளர்களின் குற்றச்சாட்டுகளை கேட்காமல் அதிமுக வேட்பாளர் தென்னரசு புறப்பட்டுச் சென்றார். Source link

ஈரோடு இடைத்தேர்தலில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி 2-வது நாளாக தொடர்கிறது

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி 2-வது நாளாக தொடர்கிறது. வாக்காளர்களை நேரில் சந்தித்து தபால் வாக்குகளை தேர்தல் அலுவலக ஊழியர்கள் சேகரிக்கின்றனர். போலீசார், வீடியோ எடுப்பவர் உள்பட 6 குழுக்களாக பிரிந்து தபால் வாக்குகள் சேகரிக்கப்படுகிறது. Source link

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பொன்குமார் 3 நாட்கள் பிரசாரம்

சென்னை: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 20 மாத கால ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, திமுக ஆட்சி ஏற்பட்ட பின் நலவாரியங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது, கட்டுமானத் தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்ள ரூ.4 லட்சம் நிதி வழங்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மாதத்தில் 8,97,548 தொழிலாளர்களுக்கு 676.99 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வாரியத்தின் அனைத்து நலத்திட்ட…

ஆதரவற்றோர் இல்ல விவகாரம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை:  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்புஜோதி என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். குரங்குகளை ஏவி கடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் கடந்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் மாயமாகி விட்டதாக கூறப்படுவதை பார்க்கும் போது அங்கு பெரும் குற்றங்கள் நடந்திருக்கக் கூடும்.…

கருத்து வேறுபாடு காரணமாக பொய் புகார் கூறுகிறார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி: கே.பி.முனுசாமி விளக்கம்..!

சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பொய் புகார் கூறுகிறார் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி. முனுசாமி ரூ.1 கோடி பணம் கேட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆடியோவை வெளியிட்ட பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கே.பி. முனுசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலில் ரூ.50 லட்சம் தயார் செய்துவிட்டு, பிறகு 50 லட்சம் தருவதாக இருவரும் பேசும் ஆடியோ வெளியானது. பணத்தை வாங்க தனது…

1 20 21 22 23 24 161