Browsing: அரசியல்

மாணவர்கள் மனங்களில் மதவெறியை புகுத்த கர்நாடக பாஜ அரசு முயற்சி: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:பாஜ ஆட்சி வந்த நாள் முதல், உண்மையான வரலாறுகளை மறைத்து, மதவெறி பார்வையில் திரித்து எழுதும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகள் எழுதிக் கொடுப்பதை வரலாறாக கற்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரளத்தின் நாராயண குரு ஆகியோரை பற்றிய குறிப்புகளை நீக்கி விட்டனர். மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவார்…

வரும் 28ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்

சென்னை: வரும் 28ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கத்தில் நடைபெறும். கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமை ஏற்கிறார். இதில் பலர் கலந்து கொள்கின்றனர். Source link

முந்தைய அதிமுக ஆட்சி மாசு கட்டுப்பாட்டு நிதியை தவறாக செலவு செய்துள்ளது: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: மாசு கட்டுப்பாட்டு நிதியை, முந்தைய  அதிமுக  ஆட்சி தவறாக செலவு செய்ததற்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: 2018 முதல் 2020-21ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு இருமுறை தலா ரூ.90 கோடி வீதம் சென்னை பகுதிக்குள் மாசுக்கட்டுப்பாட்டிற்காக ஒன்றிய அரசு ரூ.180 கோடி அளித்து வந்திருக்கிறது. இந்த நிதியை கடந்த அதிமுக அரசாங்கம் முழுக்க, முழுக்க சாலை மற்றும் வடிகால் அமைப்பதற்காகவே பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பருவ…

31 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பேரறிவாளன் விடுதலையை கொச்சையாக விமர்சிப்பதா?…எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை: 31 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பேரறிவாளன் விடுதலையை – அதற்காகப் பாடுபட்ட திமுக அரசின் நடவடிக்கைகளைக் கேலிக்கூத்து என்று விமர்சிப்பது வெட்கக்கேடானது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு துளியும் பொருத்தமில்லாதது என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: 31 வருடங்கள் சிறையிலிருந்த பேரறிவாளன் விடுதலையை கேலிக்கூத்து என்று கூறி – மனிதாபிமானமின்றி, மட்டரக அரசியல் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு கடும்…

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக நடவடிக்கைகளால் உணவுத்துறையில் ரூ.2630 கோடி சேமிப்பு : அமைச்சர் சக்கரபாணி தகவல்.!

சென்னை : திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் மாபெரும் சாதனையாக சுமார் 2630 கோடி ரூபாய் நிர்வாக நடவடிக்கைகளால் சேமிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் :-கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் மாபெரும் சாதனையாக சுமார் 2630 கோடி ரூபாய் நிர்வாக நடவடிக்கைகளால் சேமிக்கப்பட்டுள்ளது.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், பொது…

இரண்டு மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? மூடிய அறையில் பேசியும் முடிவெடுக்க முடியாமல் முடிந்தது அதிமுக கூட்டம்: தென் மாவட்டம், வட மாவட்டத்துக்கு தலா ஒன்று என முடிவு

சென்னை: தமிழகத்தில் 2 அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்று ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் நேற்று 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். ஆனாலும், முடிவு எடுக்க முடியாமல் இழுபறி நிலையே நீடிக்கிறது. தமிழக எம்பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ம் தேதி நிறைவு பெறுகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24ம்…

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு, பாமக ஆதரவு அளிக்கும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அதிமுக குழுவினர் கேட்டுக் கொண்டனர். அதிமுகவின் கோரிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ், நடத்திய கலந்தாய்வில், அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமகஆதரவளிக்கும் என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோரின்…

முதல்வருடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்திப்பு: தொகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்

சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்தித்து மனு அளித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். இந்நிலையில், மாநில வளர்ச்சிக் குழுக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருவமாவளவன், காங்கிரஸ் எம்பி திருநாவுகரசர், அதிமுக…

திராவிட மாடல் ஆட்சியே ஓராண்டு சாதனை : திண்டுக்கல் லியோனி பேச்சு

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்  நேற்று மாலை பொன்னேரியில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுகுமாரன், பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மாநில தகவல் தொழில்நுட்ப உறுப்பினர் சி.எச்.சேகர், ஒன்றிய செயலாளர்கள் வல்லூர் ரமேஷ்ராஜ், கி.வே.ஆனந்தகுமார், ஜெ.மூர்த்தி, மணிபாலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, வெற்றி ஆகியோர் முன்னிலை…

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!

சென்னை : பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:’இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌, கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ வட்டம்‌ மற்றும்‌ நகரில்‌ உள்ள அருள்மிகு சபாநாயகர்‌ (நடராஜர்‌) திருக்கோயிலில்‌ உள்ள கனகசபை மண்டபத்தின்‌ மீதேறி குறைந்த இடைவெளியில்‌ அருள்மிகு சபாநாயகரை தரிசனம்‌ செய்ய அனுமதிக்கக்‌ கோரி திரு.எம்‌.என்‌.ராதா கிருஷ்ணன்‌ என்பவரால்‌ சென்னை உயர்நீதி மன்றத்தில்‌ தொடரப்பட்ட 1//.2.9447/2022.…

1 149 150 151 152 153 161