Browsing: அரசியல்

பொன்னையன் கருத்துக்கு ஆதரவு வலுத்து வருவதன் எதிரொலி அதிமுக பொதுக்குழு ஜூன் 23ம் தேதி கூடுகிறது: கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு; பாஜவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திட்டம்

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடைசியாக 9.1.2021ம் ஆண்டு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் அப்போதைய அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. கொரோனா காரணமாக 2022ம் ஆண்டு மே மாதம் வரை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் இறுதியில் காலியாக இருந்த 6 மாநிலங்களவைக்கான தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனால் அதிமுக பொதுக்குழு நடத்தப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.…

தேவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பு: திருவாடானை தொகுதியை குறி வைக்கிறார் ஓபிஎஸ்சின் இளைய மகன்?..அதிமுகவினர் அதிருப்தி

ராமநாதபுரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நடந்த தேவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த தொகுதியை குறி வைத்து அவர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை காமராஜர் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நிறுவப்பட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாடானை பசும்பொன் தேவர் அறக்கட்டளையின் சார்பில்,…

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பிரேமலதாவை செயல் தலைவராக்க கட்சியினர் வலியுறுத்தல்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் பிரேமலதாவை செயல் தலைவராக்க கட்சியினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக. பாஜக கூட்டணியில் இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. இதில் ேதமுதிக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை சந்தித்தனர். இந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தினகரன் கட்சியோடு இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. அதிலும்…

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி திமுக ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்த பாஜவுக்கு அருகதை இல்லை: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி திமுக ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்த பாஜவுக்கு அருகதை இல்லை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஊழலை ஒழித்து விட்டதாக பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு அசாத்திய துணிச்சல் இருக்க வேண்டும். அனைத்து ஊழல்களுக்கும் தாயாக ரபேல் பேர ஊழல் நடந்ததை நாட்டு மக்கள் அறிவார்கள். இதில் மோடியின் நேரடி தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில் வறுமை குறித்து ஹின்ட்ரைஸ்…

பாஜவில் சசிகலாவை சேர்க்க முயற்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

புதுக்கோட்டை : பாஜவில் சசிகலாவை சேர்க்க தீவிரமாக முயற்சிகள் செய்து வருவதாக புதுக்கோட்டையில் பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் தமிழக சட்டமன்ற பாஜ தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும். அதிமுகவில் அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் பாஜவில் சேர்ந்தால் நாங்கள் சசிகலாவை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இவ்வாறு…

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் கீழ் பவானி வாய்க்காலின் கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த மாதம் 29ம் தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். ஆனால், அந்த போராட்டத்தை கட்சியின் தலைமை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது.  இதனால், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்த், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் லோகுபிரகாசு, மேற்கு…

காங்கிரசுக்காக இனி பணியாற்ற மாட்டேன்: பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

பாட்னா: காங்கிரசுக்காக இனி பணியாற்ற மாட்டேன் என்று தேர்தல் வியூக நிபுணர் கூறியுள்ளார். பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம் முழுவதும் ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். அதையொட்டி, வைஷாலி மாவட்டத்துக்கு வந்த அவர், அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. நான் நல்ல யோசனைகளை சொன்னபோதிலும், தனது வியூகத்தை மாற்றிக்கொள்ள காங்கிரஸ் கட்சி முன்வரவில்லை.அது…

முன்னாள் மாவட்ட செயலாளர் பயன்படுத்திய அலுவலகம் இடிப்பு: அதிமுக நிர்வாகிகள் இடையேயான கோஷ்டி பூசல் உச்சகட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகிகள் இடையேயான கோஷ்டி பூசல் காரணமாக ஜெயலலிதா பெயரில் இயங்கி வந்த  அம்மா இல்லம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு எற்பட்டது. திருவண்ணாமலை போளூர் சாலையில் அம்மா இல்லம் என்ற பெயரில் முன்னாள் மாவட்டம் செயலாளர் பெருமாள் நகர் கே. ராஜன் காட்சி அலுவலகம், கணினி பயிற்சி கூடம், தயாள் பயிற்சி கூடம் ஆகிய வற்றை நடத்தி வந்தார். கொரோனா காரணமாக அம்மா இல்லம் மூடப்பட்டு செயல் படாமல் இருந்து உள்ளது. குத்தகை அடிப்படையில் அம்மா…

அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை :அரசின் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். 2 நாட்கள் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்துத்துறை செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். Source link

சென்னை மாவட்ட பாமக செயலாளர்கள் 2 பேர் பதவி பறிப்பு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஸ்ரீராம் ஐயர் என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதோடு இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார். அதேபோன்று, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கட்சியின் நலன்…

1 143 144 145 146 147 161