Browsing: அரசியல்

எப்போதுமே தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி வாய் கிழியப் பேசுவதில் எடப்பாடி பழனிசாமிக்கு நிகர் அவரே: டி.ஆர்.பாலு கடும் கண்டனம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனக்கே தெரியாத “சமூகநீதி” பற்றி தி.மு.க.விற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதுமே தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி வாய் கிழியப் பேசுவதில் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நிகர் அவரேதான் என்பது எனக்குத் தெரியும்.திராவிட முன்னேற்றக் கழகமும், முத்தமிழறிஞர் கலைஞரும்தான் பட்டியலினச் சமூகத்திலிருந்து  அறிவுசார்ந்த மாபெரும் தலைவரான கே.ஆர்.நாராயணன் அவர்களை இந்த நாட்டின் குடியரசுத்…

பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு புதுவை முதலமைச்சரை சந்தித்து ஆதரவு திரட்டினார்!!

புதுச்சேரி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்கின்றனர். 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.இத்தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாஜ வேட்பாளர் திரெளபதி முர்மு ஒவ்வொரு மாநிலமாக சென்று…

குடியரசுத் தலைவர் தேர்தல் இரு நபர்களுக்கு இடையேயானது அல்ல; இரு சித்தாந்தங்களுக்கு இடையேயானது : முரசொலி விமர்சனம்!!

சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தல் இரு நபர்களுக்கு இடையேயானது அல்ல; இந்தப் போராட்டம் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயானது என்று முரசொலி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று வெளியான கட்டுரையில், ‘இந்தியக் குடியரசுவின் குரலை ஓங்கி ஒலிப்பவராக இருக்கிறார் யஷ்வந்த் சின்கா. அவரைத்தான் பா.ஜ.க.வுக்கு எதிர்நிலை நிலைப்பாடுகள் எடுக்கும் கட்சிகள் சேர்ந்து இந்தியக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளன. தமிழ்நாடு வருகை தந்த யஷ்வந்த் சின்காவுக்கு மாபெரும் வரவேற்பை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைத்து வழங்கினார்…

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ள பொருளாளர் பதவிக்காக மோதும் சமூக தலைவர்கள்: பதவிக்கு வரும் முன்பே குடைச்சல் ஆரம்பம்

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். அதேநேரத்தில், அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்துள்ளது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தன்னை அடுத்த தேர்தல் வரும்வரை நீக்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.…

காட்பாடி மேம்பாலத்தில் அத்துமீறல்: அதிமுக மாவட்ட செயலாளர் கைது

வேலூர்: காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை அத்துமீறிய புகாரில்  அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்புவை காட்பாடி போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்ேவ மேம்பாலம் சீரமைப்பு பணிகள் ரூ2 கோடி மதிப்பீட்டில் கடந்த ஒரு மாதகாலமாக நடந்து வந்தது. இப்பணிகள் முடிவடைந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேற்கொண்ட ஆய்வுக்கு பின்னர் நேற்று இருசக்கர வாகன வாகனங்கள் ரயில்வே பாலம் வழியாக அனுமதிக்கப்பட்டது.இந்த நிலையில் காலை 10 மணியளவில் வேலூர் எம்பி கதிர்ஆனந்த் காட்பாடி ரயில்வே…

கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது: ராகுல்காந்தி சாடல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்தார். வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம் மக்களை நம்ப வைக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார். Source link

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்

சென்னை: எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்தித்து, ஆதரவு திரட்டினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக…

ட்விட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை தலைமை நிலைய செயலாளர் என மாற்றினார் எடப்பாடி பழனிசாமி : அதிர்ச்சியில் ஓபிஎஸ்

சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கடந்த 3 வாரமாக உச்சக்கட்ட போர் நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக எடப்பாடி அணியினர் அதிரடியாக அறிவித்தனர்.தற்போது, எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை நிலைய செயலாளராக செயல்பட்டு வருவதாகவும், ஓபிஎஸ் அதிமுகவின் பொருளாளராக மட்டுமே நீடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடியை பொதுச்செயலாளராக நியமிக்க வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

சொல்லிட்டாங்க…

* விளம்பரங்கள் எனக்கு தேவையில்லை. ஏற்கனவே கிடைத்த புகழையும், பெருமையையும் காலமெல்லாம் கரையாமல் காப்பாற்றினால்போதும் என்று நினைப்பவன் நான். – முதல்வர் மு.க.ஸ்டாலின்* இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. – பிரதமர் மோடி* உதய்ப்பூர் படுகொலை சனாதனிகள் விரித்த சதிவலையில் சிக்கிய கொடுஞ்செயலே ஆகும். – விசிக தலைவர் திருமாவளவன்* சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வரும் பெண் போராளி தீஸ்தா செதல்வாத்…

காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம், தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டுக்கான இடைத்தேர்தல் வருகின்ற 9ம் தேதி நடைபெறயுள்ளது. இதையோட்டி நேற்று திமுக தேர்தல் அலுவல திறப்பு விழா நடந்தது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து, 36வது வார்டில் போட்டியிடும்…

1 129 130 131 132 133 161