Browsing: அரசியல்

உள்நாட்டில், வெளிநாடுகளில் குஜராத் பெயரை கெடுக்க சதி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புஜ்: உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குஜராத்தின் பெயரை கெடுக்க சதிகள் நடந்தன,’ என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, 2வது நாளான நேற்று கட்ச் மாவட்டத்தின் புஜ் பகுதிக்கு சென்றார். 2001ம் ஆண்டில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 13,000 பேர் பலியாயினர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, 470 ஏக்கரில் கட்டப்பட்ட பிரமாண்ட நினைவிடத்தை…

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை இழுக்க ரூ.100 கோடியில் அதிரடி திட்டம்: ஓபிஎஸ் – சசிகலா ரகசிய ஒப்பந்தம்

சென்னை: அதிமுகவை கைப்பற்றும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை இழுக்க ஓபிஎஸ், சசிகலா இணைந்து ரூ.100 கோடியில் அதிரடி திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக, இருவரும் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, எடப்பாடி ஆதரவாளர்களிடையே கலக்கத்தையும், அதிமுகவில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்தது. ‘ஒற்றைத் தலைமையின் கீழ்…

ஆர்எஸ்எஸ் பேச வேண்டியதை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

விருதுநகர்: ஆர்எஸ்எஸ் பேச வேண்டியதை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதாக காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடா’ யாத்திரையில் பங்கேற்பது தொடர்பான காங். ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல்காந்தி கன்னியாகுமரியில் செப்.7ல் நடைபயணம் தொடங்கி காஷ்மீர் வரை செல்ல உள்ளார். இந்த நெடும்பயணம் திருப்பு முனையாக அமையும். பாஜ மாநில தலைவராக அண்ணாமலையை இறக்கி பார்த்தார்கள். அவரிடம்…

தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இன்று முடிவு: சோனியா, ராகுல், பிரியங்கா பங்கேற்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சி தொட ர்ந்து 2வது முறையாக கடந்த 2019 மக்களவை தேர்தலிலும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ராகுல் காந்தி, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் கட்சித் தலைவராக வர வேண்டுமென…

ஜார்கண்டில் அரசியல் நெருக்கடி ஆளுங்கட்சி எம்எல்ஏ.க்கள் ரகசிய இடத்திற்கு மாற்றம்: முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடி

ராஞ்சி: ஜார்கண்டில், ஆட்சியை தக்க வைக்க முதல்வர் ஹேமந்த் சோரன், ஆளுங்கட்சி கூட்டணி  எம்எல்ஏக்களை கூண்டோடு ரகசிய இடத்திற்கு மாற்றி உள்ளார். ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சுரங்க குத்தகை ஒதுக்கீடு பெற்றதாக பாஜ குற்றம்சாட்டியது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவரது எம்எல்ஏ பதவியை பறிக்கும்படி, ஜார்கண்ட் ஆளுநருக்கு இரு தினங்களுக்கு முன் தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. அதன்படி, ஹேமந்த் சோரனை ஆளுநர் ரமேஷ் பயாஸ் அதிகாரப்பூர்வமாக நேற்று தகுதி…

அவுட்சோர்சிங் முறையில் டிரைவர்கள் நியமிப்பதை கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு அவுட்சோர்சிங் முறையில் ஓட்டுனர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தனியார் நிறுவனம் மூலம், அவுட்சோர்சிங் முறையில் 400 ஓட்டுனர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை அனுமதிக்க முடியாது. விரைவு போக்குவரத்து கழகத்திற்கு அவுட்சோர்சிங் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை நியமிப்பது இத்துடன் முடிவடைந்து விடாது. இதுவே வழக்கமாக…

உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ்சுக்கு திடீர் ஆதரவு: எடப்பாடி அணியினர் கலக்கம்

சென்னை: உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால், எடப்பாடி பழனிசாமி அணியினர் கலக்கம் அடைந்துள்ளனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் நடிகர் பாக்யராஜ் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது தனது ஆதரவை ஓபிஎஸ்சுக்கு தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று, சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் வந்து சந்தித்து சந்தித்தார். அப்போது வைத்திலிங்கம்,…

ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: மக்களுக்கு எதிராக ஆளுநர்  செயல்படுவதாலும், வகுப்புவாத  சக்திகளுடன் கைகோர்த்து செயல்படுவதாலும், அவரை  உடனே திரும்பப் பெற  வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின்  ஆளுநர் பொறுப்பை ஆர்.என்.ரவி ஏற்றதிலிருந்து, தன் ஆர்.எஸ்.எஸ் முகத்தை வெளிப்படையாக  காண்பித்துக் கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே ஜி.யு.போப்பின்  திருக்குறள் மொழிபெயர்ப்பு திருத்தப்பட்டதாக பொய்யான தகவலை  தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நலன்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே  தொழிலாக கொண்டுள்ள  ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார்களின்  ஊதுகுழலாகவே…

ராகுலை குற்றம்சாட்டி சோனியாவுக்கு 5 பக்க கடிதம் காங்.கில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திடீர் விலகல்: காஷ்மீரில் புதிய கட்சி தொடங்க முடிவு

புதுடெல்லி: காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் சோனியா காந்திக்கு 5 பக்க விலகல் கடிதம் அனுப்பினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அடுத்த மாதம் 20ம் தேதிக்குள், கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் நேற்று காங்கிரசில் இருந்து…

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் ‘இதை எப்படி அரசியல் பண்ணணும்னு யோசிக்கிறேன்’: பாஜ தலைவர் அண்ணாமலை பேசியதாக பரவும் ஆடியோ வைரல்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் நடந்தபோது, பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை, ‘‘இதை எப்படி அரசியல் பண்ணணும்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்…’’ என்று பேசியதாக வெளியான ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்த கடந்த 13ம் தேதி நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்  மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் காரில்…

1 102 103 104 105 106 161