Browsing: அரசியல்

தேர்தல் விதிமீறல் வழக்கு லாலு பிரசாத் விடுவிப்பு

ஹாஜிபூர்: கடந்த 2015ம் ஆண்டில் தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவை விடுவித்து பீகார் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. கடந்த 2015ம் ஆண்டு, பீகார் மாநிலம் ரகோபூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய அம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ‘இந்த தேர்தல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், உயர் சாதியினருக்கும் இடையே நடக்கும் மோதல்’ என பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு…

விஜயகாந்த் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும்: துரை வைகோ

சென்னை:அதிமுகவையும், பாஜகவையும் நாங்கள் வேறாக பார்க்கவில்லை என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.  வைகோவின் சாதனைகள், அரசியல் பயணம் பற்றி ஆவணப்படம் வெளியிடப்போகிறோம். அதற்கு அதிமுக, பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. எம்ஜிஆர் போல வள்ளல் மனம் படைத்தவர் விஜயகாந்த். அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும் கூறினார். Source link

திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி

சென்னை; அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைகிறார். பொள்ளாச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்றப் போவதாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். Source link

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் பழனிசாமி தண்டனையில் இருந்து தப்ப முடியாது: டிடிவி தினகரன் பேச்சு

தஞ்சை: நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் பழனிசாமி தண்டனையில் இருந்து தப்ப முடியாது என அமமுக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்ததி பேசிய அவர்; பழனிசாமி மீது எந்த தனிபட்ட விரோதமும் இல்லை. அனைவரும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் கருத்தை வரவேற்கிறேன். சில மேதாவிகள் சுவாசமே துரோகமாக  கொண்டவர்கள் நல்ல விஷயத்திற்கு ஒத்துவர மாட்டார்கள். துரோகிகள், துரோக சிந்தனை கொண்டவர்கள் திருந்தினால் தான் மற்றவர்களின் எண்ணங்கள்…

கோயிலில் இஸ்லாமிய அமைச்சர் முதல்வர் நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்கணும்: பாஜ போர்க்கொடி

பாட்னா: பீகார் அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளவர் முகமது இஸ்ரேல் மன்சூரி. இவருக்கு கயா மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் கயாவில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணுபாத் கோயிலில் முதல்வர் நிதிஷ் குமார் தரிசனம் செய்தார். அப்போது, அவருடன் இஸ்லாமியரான அமைச்சர் முகமது இஸ்ரேல் மன்சூரியும் சென்றார். இதற்கு பாஜ மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த கோயிலில் மாற்று மத நம்பிக்கை கொண்டவர்கள்…

சொல்லிட்டாங்க…

தமிழக அரசை பொறுத்தவரைக்கும் புதிய வேலைவாய்ப்புகளை மனதில் வைத்துதான் அனைத்து திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன. :- முதல்வர் மு.க.ஸ்டாலின்ரயில்வே ரூ.100 செலவு செய்தால், பயணிகளிடம் இருந்து ரூ.45 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. :- ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழகம் முழுவதும் மதிய உணவு திட்டம் மாணவர்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். :- தேமுதிக தலைவர் விஜயகாந்த்தமிழ்நாட்டில் தமிழர்களின் நிலம் மற்றும் உழைப்பில் செழிக்கும் என்எல்சி தமிழர்களுக்கு வேலை வழங்க மறுக்கிறது. :-…

அதிமுக பொதுக்குழு செல்லாது விவகாரம் மேல்முறையீட்டு மனு தீர்ப்பு சாதகமாக அமையும்: மாஜி அமைச்சர் உதயக்குமார் பேட்டி

உசிலம்பட்டி: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தீர்ப்பு சாதகமாக அமையும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நேற்று முன்னாள் அமைச்சர் உதயக்குமார் எம்எல்ஏ அளித்த பேட்டி: அதிமுகவின் ஒற்றை தலைமை கோரிக்கையை ஏற்று ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பாக 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்தனர். அதிமுக பொதுக்குழுவும் நீதிமன்றத்தின்…

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு வழக்கு 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். அதில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி, கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின்…

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி மேல்முறையீடு இன்று விசாரணை: நீதிபதிகள் அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று தொடங்குகிறது. அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். அதில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி,…

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4,083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1,500 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். நடப்பாண்டு முதல் தான் மாத ஊதியம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. கிராமப்பகுதிகளில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குக் கூட இதைவிட அதிக ஊதியம் வழங்கப்படும் நிலையில்,…

1 104 105 106 107 108 161