Browsing: செய்திகள்

“மக்கள் என்னை தேசிய அரசியலுக்கு அழைக்கிறார்கள்” – சொல்கிறார் சந்திரசேகர் ராவ் | People are calling me for national politics: Chandrasekhar Rao says

தேசிய அரசியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக சரியான தலைவர் இல்லாமல் இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு யார் தலைமை தாங்குவது என்ற போட்டி எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது. சோசியல் மீடியாக்களும், பாஜகவும் இணைந்து ராகுல் காந்தியை பப்புவாக சித்தரித்துவிட்டதால் அவரை எதிர்க்கட்சிகளின் தலைவராக ஏற்றுக்கொள்ள மற்ற கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. மம்தா பானர்ஜி தேசிய அரசியலுக்கு வர சரத்பவார் உட்பட சில தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனாலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் பெரிய முன்னேற்றம் இல்லை. துணை ஜனாதிபதி தேர்தலில்…

ரிஷி சுனக் vs லிஸ் டிரஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஏன் பிரிட்டன் பிரதமர் ஆக முடியவில்லை?

ஜுபைர் அஹமதுபிபிசி செய்தியாளர்5 செப்டெம்பர் 2022, 11:40 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, ரிஷி சுனக் லிஸ் டிரெஸிடம் பிரிட்டன் பிரதமர் போட்டியில் தோற்றது ஏன்?பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஆகவுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ். பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின் தங்கள் அடுத்த தலைவரை தேர்ந்தடுக்கும் பணிகளை கன்சர்வேட்டிவ் கட்சியினர் தொடங்கினர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி போட்டியில் வென்றுள்ளார்…

போலீஸ் மிரட்டியதால் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை பலி என கணவர் புகார்!

மயிலாடுதுறை அருகே  வீட்டில் 20 பவுன் நகை திருட்டு புகார் அளித்த தங்களையே போலீஸ் எஸ்.ஐ மிரட்டியதால் 9 மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூரைச் சேர்ந்தவர் முகம்மது பஷீர். கிளியனூரில் கடை வைத்து நடத்திவரும் இவரது காரை அதே ஊரைச் சேர்ந்த முகம்மது ரபி என்பவர் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம்…

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனி குழு அமைப்பு

சென்னை: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகக் குழு என்ற பெயரில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என தமிழக டிஜிபி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளும் அந்த குழுவில் இணைந்து செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. Source link

லாக்அப் மரணம்: கொடூரமாக சித்ரவதை செய்து கொல்லப்பட்ட பழங்குடி இளைஞர்; காவலர்கள் சஸ்பெண்ட் | tribal youth dies in custody, 5 officers suspended in Madhya Pradesh

மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் மன்பூர் எனும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் அர்ஜுன் சிங்கரே (19). கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு கொள்ளை சம்பவத்தின் கீழ் விசாரணை என்ற பெயரில் காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர். அடுத்த நாள் காவலர்களின் கொடூர தாக்குதலால் அர்ஜுனின் உடல்நிலை மோசமடையவே, அவர் அருகில் உள்ள சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மரணம்சித்திரிப்புப் படம்இதனையறிந்த அர்ஜுனனின் உறவினர்கள், சனிக்கிழமை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று…

பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கான மூன்று காரணங்கள்

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் இந்திய அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டன.முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. விராட் கோலி 60 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டத்தில் எந்தக் கட்டத்தில் உறுதியான ரன்குவிப்பு இல்லை.அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 1 பந்து…

சர்வாதிகாரத்தனமாக செயல்படுகிறாரா? பிரதமர் மோடி குறித்து வெளிப்படையாக பேசிய அமித் ஷா!

பிரதமர் நரேந்திர மோடியை போன்ற ஒருவரை தான் பார்த்ததில்லை என்றும் தனக்கு தெரிந்த ஜனநாயகத் தலைவர் மோடிதான் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அரசின் சன்சாத் (Sansad TV) தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,  எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் மோடியுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. அடுத்தவர்களின் பேச்சை கவனிப்பதில் மோடியை போல் ஒரு நபரை பார்க்க முடியாது. எந்த பிரச்சனை குறித்த சந்திப்பாக இருந்தாலும், அவர் தேவையான அளவு மிகக்…

திண்டுக்கல் அருகே அரசு நகர பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் புகுந்ததில் 2 பேர் பலி

திண்டுக்கல்: நத்தம் அருகே அரசு நகர பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் புகுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நிகழ்த்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். Source link

ஹேக் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு – நீண்ட முயற்சிக்குப் பிறகு மீட்ட சைபர் க்ரைம்

முன்பு மேடையில் பரஸ்பரம் அரசியல் கட்சி தலைவர்கள் மாறி மாறி பேசி வருவார்கள். ஆனால், சமூக வலைதளங்கள் பெருகியபிறகு, குறிப்பாக ட்விட்டர் பக்கத்தில் அரசியல் தலைவர்கள் கருத்து சண்டை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருந்துவரும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு, ஹேக் செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கில் நள்ளிரவில் ஒரு பதிவு வெளியானது.செந்தில் பாலாஜி அந்த பதிவில், `அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன்…

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பொது இடத்தில் பெண்ணிடம் தவறாக நடந்த விவகாரம்: வலுக்கும் எதிர்ப்பு

இம்ரான் குரேஷிபிபிசி இந்தி சேவைக்காக19 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகர்நாடக முன்னாள் அமைச்சரும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினருமான அரவிந்த் லிம்பவல்லி, தனது தொகுதியில் வசிக்கும் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதும் தொலைக்காட்சியில் அதுகுறித்துப் பேசியதும் மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அதுகுறித்து உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பேசியபோது, “நான் அவரை பாலியல் வன்கொடுமை செய்தேனா, என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்?” என்று அவர் தனது செயலை நியாயப்படுத்தியது சமூக ஊடகங்களில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அவருடைய தொகுதிக்கு உட்பட்ட…

1 465 466 467 468 469 529