“அரை மணி நேரம் போதும்; ஆனால் சட்டத்தை கையில் எடுக்க விருப்பமில்லை!”- அண்ணாமலை | bjp tn leader Annamalai slams dmk govt amid continous attacks on bjp cadres
கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கோவையில் சுமார் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மற்ற மாவட்டங்களிலும் போலீஸார் அலர்ட்டாக இருக்கின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேசத்துக்கு எதிராக பேசக்கூடிய சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரை…









