ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
தமிழகத்தின் தென்திருப்பதி என்றழைக்கப்படும் மலைக்கோயிலான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும், திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24-ம்தேதி தொடங்கியது.கோயில்தொடர்ந்து புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பெருமாள் சிறப்பு அலங்காரம், அபிஷேகம்…









