உலக முதலீட்டாளர்கள் வாரம்: சரியாக முதலீடு செய்ய செபி சேர்மன் கொடுத்த டிப்ஸ்கள்..! | Global Investors Week: Tips given by SEBI Chairman to invest properly..!

Share

 செபி அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே முதலீட்டாளர்கள் முதலீட்டினை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் முதலீடுகளை பிரித்து பல்வேறு சொத்து பிரிவுகளில் (ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள்)  டைவர்சிஃபைட்  முறையில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை தரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 செபி அமைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறது. தற்போது நமது நாட்டில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை மொத்த டிமேட் கணக்குகள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் முதலீட்டாளர்கள் தமது முதலீட்டு முடிவுகளை எடுக்கும் பொழுது நன்கு ஆராய்ந்து தக்க நிதி நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 செபி அமைப்பு உலக முதலீட்டாளர்கள் வாரத்தை உலக நாடுகளுடன் சேர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது. பங்குச் சந்தையில் ஒரு சிலர் நல்ல லாபத்தை பார்த்தாலும் பெரும்பாலான மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தவறான பங்குகளில் முதலீடு செய்து பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். மேலும் பங்கு சந்தை என்றால் சூதாட்டம் என்பது போன்ற தவறான கருத்துக்களும் ஒரு சில மக்களிடம் உள்ளது.

நமது நாட்டில் பங்கு சந்தையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கினாலும் வளர்ந்த நாடுகளை ஒப்பிட்டால் நமது நாட்டில் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது. அதற்கு பங்கு சந்தை குறித்தான போதிய அறிவு முதலீட்டாளர்களிடம் இல்லாமல் இருப்பதே காரணமாகும். மேலும் பங்கு சந்தை சார்ந்து நடக்கும் பித்தலாட்டங்களும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதனால் முதலீட்டாளர்களிடம் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் செபி அமைப்பு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com