ரிஷப் பண்ட் விபத்து தொடர்பான வைரல் வீடியோ – எதிர்ப்பு தெரிவிக்கும் ரோஹித் சர்மா மனைவி ரித்திகா! | Rohit Sharma’s wife Ritika Sajdeh lashes out at sharing Rishabh Pant’s viral clips
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் நேற்று டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் சென்றுகொண்டிருந்தபோது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்பாக பிசிசிஐ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.அந்த அறிக்கையில், “ரிஷப் பண்டிற்கு நெற்றியில் இரண்டு வெட்டுகள், வலது முழங்கால், வலது மணிக்கட்டில் தசைநார் கிழிவு, கணுக்கால் மற்றும் முதுகில் சில சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டுள்ளன. அவருக்குத்…









