Browsing: செய்திகள்

சென்னைக்கு அருகில் இப்படி ஒரு அருவியா? 365 நாளும் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவிலும், திருப்பதியிலிருந்து 46 கிமீ தொலைவிலும் கைலாச கோணா அருவி அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் என்பது இந்த அருவியின் சிறப்பாகும். Source link

தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்; பீகார் அதிகாரிகள் குழு பேட்டி

சென்னை: பிரச்சனை இன்றி தமிழ்நாட்டில் இருப்பதாக பீகார் தொழிலாளர்கள் தெரிவித்தனர் என தமிழ்நாடு அரசுடன் ஆலோசித்த பின் பீகார் அதிகாரிகள் குழு பேட்டி அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்; அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கினர் எனவும் அவர் பேசியுள்ளனர். Source link

வாட்ஸ் ஆப் செய்திகளால் அச்சத்தில் தவிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்கள், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய பொய் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பான செய்திகள், சமூக ஊடக பதிவுகள் வைரலாக பரவிய நிலையில் தமிழ்நாடு காவல்துறை அதை மறுத்து செய்தி வெளியிட்டது. தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இந்தச் செய்திகளை நிராகரித்து ஆங்கிலத்தில் காணொளி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பிகார்…

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ நாளை உண்ணாவிரத போராட்டம்..!!

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. மார்ச் 24ம் தேதி 20,000 கிலோ மீட்டர் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. Source link

“கோவிலில் யானை வளர்க்கக் கூடாது” – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Images”மத வழிபாடு சார்ந்தோ, தனி நபர் பயன்பாட்டிற்காகவோ யானைகளை வாங்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை உறுதிசெய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆனால், இந்த உத்தரவு வெளிவந்த பிறகு அதற்கு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?கோவில்கள் மற்றும் தனி நபர்கள் வளர்க்கும் யானைகளை அரசின் மறு வாழ்வு முகாம்களுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. இனி வரும் காலங்களில்…

ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். Source link

பல்லு படாம பாத்துக்க: இது அடல்ட் காமெடியா, அசட்டு காமெடியா?

34 நிமிடங்களுக்கு முன்னர்தமிழில் வயதுவந்தோரைக் குறிவைத்து எடுக்கப்படும் ‘அடல்ட் காமெடி’ வகைத் திரைப்படங்கள், எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், படத்தைப் பார்க்கும்போது ஏமாற்றத்தையே தருகின்றன. ஏன் இப்படி?’டெம்பிள் மங்கீஸ்’ யூ டியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற விஜய் வரதராஜ் இயக்கிய ‘பல்லுப் படாம பாத்துக்க’ என்ற அடல்ட் காமெடி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தலைப்பிலேயே இது வயதுவந்தோருக்கான பாலியல் சார்ந்த நகைச்சுவைத் திரைப்படம் என்பதைச் சுட்டுவதைப் போல இருக்கிறது. இந்தத் தலைப்பின் மூலம், இளைஞர்களை ஈர்க்க முடிவு செய்திருக்கிறார்…

டேன்ஜெட்கோ பொறியாளர்கள் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

சென்னை: 2011 – 2016 வரை விசாகப்பட்டினத்திலிருந்து துறைமுகங்களுக்கு நிலக்கரி கொண்டு வர செலவிட்டதில் ரூ.908 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ரூ.908 கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக டேன்ஜெட்கோ பொறியாளர்கள் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து முறைகேடாக போலி ஆவணம் மூலம் கணக்கு காட்டி மோசடி என அறப்போர் இயக்கம் புகார் மனு அளிக்கப்பட்டது. Source link

எமி மார்டினெஸ்: சறுக்கல்களை கடந்து ‘உலகின் சிறந்த கோல்கீப்பராக’ வளர்ந்த இளைஞன்

பட மூலாதாரம், Getty Images9 நிமிடங்களுக்கு முன்னர்செப்டம்பர் 2020-இல் எமி மார்டினெஸ் ஆர்செனல் கிளப்பில் இருந்து ஆஸ்டன் வில்லாவில் சேர்ந்தபோது, அவர் தனது லாக்கரில் தனது இலக்குகளைக் கொண்ட பட்டியல் ஒன்றை லேமினேட் செய்து வைத்தார். உலகின் சிறந்த கோல் கீப்பராக மாற வேண்டும் என்பது அந்த இலக்குகளில் ஒன்று.அந்த நேரத்தில், அவரது கிளப்பில் கூட நம்பர் ஒன் கீப்பராக இருந்திருக்காத ஒருவருக்கு அதுவொரு வியக்கத்தக்க, மிக உயர்ந்த, கிட்டத்தட்ட சாத்தியமற்ற இலக்காக இருந்திருக்கலாம்.வில்லாவின் பாடிமூர் ஹீத்…

மார்ச்-03: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: சென்னையில் 286-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

1 380 381 382 383 384 529