Manmohan Singh : 'அவர் குறைவாகப் பேசினார், மிகுதியாக சாதித்தார்' – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வரான ஸ்டாலின் மன்மோகன் சிங்குடனான தனது நினைவலைகளை பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.Manmohan Singhஅவர் கூறியிருப்பதாவது, ‘முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம்…









