IND VS NZ: இந்திய அணியை அச்சுறுத்தும் நியூசிலாந்தின் 5 வீரர்கள் யார்?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரிட்சை நடத்துகின்றன.சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப்பின் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியில் 2000ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் இந்திய அணியை வென்று நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. ஆனால், ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் ஒருமுறை…









