Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: 35 நாள்களில் ப்ளீடிங்… 15 நாள்கள் நீட்டிப்பு; ஹார்மோன் சிகிச்சைதான் ஒரே தீர்வா? | Doctor Vikatan: Bleeding in 35 days.. Is hormone therapy the only solution?

Doctor Vikatan: என் மனைவிக்கு 40 வயதாகிறது. அவருக்கு எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னை உள்ளது. மருத்துவர் 3 மாதங்களுக்கு மாத்திரைகள் கொடுத்தார். மாத்திரை எடுக்க ஆரம்பித்த பிறகு 35 நாள்களில் அவருக்கு திட்டுத்திட்டாக ப்ளீடிங் வருகிறது. அது 15 நாள்களுக்கு நீடிக்கிறது. மருத்துவரை அணுகியபோது ப்ளீடிங்கை நிறுத்த மாத்திரைகள் கொடுத்தார். சில நேரங்களில் இப்படி நடக்கும் என்றும் அதற்கு ‘பிரேக்த்ரூ ப்ளீடிங்’ என்று பெயர் என்றும் சொன்னார். தேவைப்பட்டால் ஹார்மோன் மாத்திரைகள் எடுக்கலாம் என்கிறார். வெஜைனாவை ஸ்கேன் செய்து…

இந்தியர்களின் உணவில் இடம் பிடித்த டீ, மஞ்சள்… கொரோனா பாதிப்பை குறைக்க உதவியதாக ஆய்வில் தகவல்! | Tea, turmeric, found in the diet of Indians, has helped to reduce the effects of Corona,

இந்தியர்கள் தொடர்ந்து தேநீர் அருந்துவதால், HDL (High density lipoprotein) அளவை அது அதிகப்படுத்துகிறது. இது நல்ல கொலஸ்ட்ரால் எனவும் அழைக்கப்படுகிறது. தேநீரில் உள்ள கேட்டசின்கள், ரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடை குறைக்க உதவுகிறது.தினசரி உணவில் மஞ்சளைப் பயன்படுத்துவதால், அது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின், SARS-CoV-2 தொற்று மற்றும் கோவிட்-19 தொற்றின் தீவிரத்தன்மையைக் குறைப்பதிலும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.மறுபுறம், சிவப்பு இறைச்சி, பால் பொருள்கள்…

ஆச்சர்ய வரலாறும் ஆபத்தும் நிறைந்த புட்டிப்பால் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 17 – Risky baby bottle milk- infant care 17

‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.சென்ற அத்தியாயத்தில், பாலாடையில் பவுடர் பால்…

பிறப்புறுப்பில் செய்த வாக்ஸிங், சருமம் உரிந்து, காயம்; இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் சந்திரா நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள துளசி நகரில் உள்ள ஸ்பா ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். அங்கு, தன்னுடைய பிறப்புறுப்பில் (Genital Area) உள்ள முடியை அகற்றுவதற்காக 4,500 ரூபாய் மதிப்புள்ள பிரேசிலியன் வாக்ஸிங்கை (bikini waxing) தேர்வு செய்திருக்கிறார்.spa வாக்ஸிங் செய்கையில், வாக்ஸ் அதிக சூடாக இருப்பதாகவும், வாக்ஸ் செய்யப்பட்ட இடத்தில் எரிவதாகவும் தெரிவித்துள்ளார். `இது மிகவும் சாதாரணம் தான், எரிச்சலைக் குறித்து அச்சப்பட…

‘இன்னும் கொதிப்புடன் இருக்கும் கொரோனா’ – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை | WHO Warns Covid Pandemic Still Volatile

கோவிட் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழு ஒவ்வொரு மூன்றும் மாதங்களுக்கு ஒருமுறையும் கூடுகிறது. அடுத்த கூட்டம் மே மாதத் தொடக்கத்தில் கூடவுள்ளது. அதன் முந்தையக் கூட்டங்களைப் போலவே இந்தக் கூட்டமும் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும். மைக்கேல் ரியான்இதேபோல் ஜனவரி 30, 2020 அன்று கொரோனாவை PHEIC -ஆக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு. அப்போது சீனாவில் மட்டும் 100-க்கும் குறைவான நோயாளிகள் இருந்தனர். சீனாவை தாண்டி வேறு எங்கும் இறப்புகளும்…

சருமப்பொலிவு, ரத்த ஓட்டம் , இயற்கை வயாக்ரா; அளவற்ற பலன்கள் நிறைந்த தர்பூசணி! I Health Benefits Of Watermelon

ஒரு டீஸ்பூன் கடுகுப் பொடியுடன், ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸைக் கலந்து பூசினால், மங்குகள் உள்ள பகுதியில் தர்பூசணியின் சாறு ஊடுருவிச் சென்று மங்குகளை மறையச் செய்யும். தர்பூசணி விதை எண்ணெயை (இது கடைகளில் கிடைக்கிறது) பிறந்த குழந்தைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டி வர, சருமம் மெருகேறி ஜொலிக்கத் தொடங்கும்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமானலும் ஆபத்து என்பார்கள். தர்பூசணி கோடைக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், 92 சதவிகிதம் நீரின் பங்கு இருப்பதால் அசீரணக்கோளாறு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு உப்புசம் அடைதல்…

Doctor Vikatan: உடல் முழுவதும் வியர்க்குரு… அதை விரட்டும் பவுடர் உபயோகிப்பது தீர்வாகுமா? | Doctor Vikatan: Sweating all over body… Is using powder to repel it the solution?

Doctor Vikatan: என் வயது 35. ஒவ்வொரு வருடமும் வெயில் காலத்தில் வியர்க்குரு பாதிப்பால் தீவிர அவதிக்குள்ளாகிறேன். கை, கால்கள், கழுத்து என எல்லா இடங்களிலும் வியர்க்குரு அதிகம் வருகிறது. பார்ப்பதற்கும் அசிங்கமாகத் தெரிவதுடன், அரிப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை. வியர்க்குருவை விரட்டும் பவுடர் போட்டாலும் மீண்டும் வியர்க்குரு வருகிறது. இதற்கொரு தீர்வு சொல்ல முடியுமா?பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் |…

Doctor Vikatan: சோப்புக்கு பதில் நலங்கு மாவு… குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாமா? | Doctor Vikatan: Naalku powder instead of soap… Can children use it too?

வேறு எந்தப் பொருளுக்கு அலர்ஜி ஏற்பட்டாலும் நலங்கு மாவுக்கு அலர்ஜி ஏற்படாது. சருமம் வறண்டு போகாமல், ஈரப்பததத்துடன், பொலிவாக இருக்கும். பாசிப்பருப்பு, வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு, கார்போக அரிசி, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, பச்சரிசி, கடலைப்பருப்பு ஆகியவை அனைத்தும் சேர்த்து அரைக்கப்படுவதே நலங்கு மாவு. பாசிப்பருப்பு மட்டும் அரை கிலோ, மற்ற பொருள்கள் இரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டால் போதும். கஸ்தூரி மஞ்சள் 20 கிராம் போதும்.பெண் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதென்றால் கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக்கொள்ளலாம்.…

`பூனை தான் இறந்த என் தந்தையின் மறுபிறவி’… வளர்க்கும் பூனைக்காக விவாகரத்துக்கு விண்ணப்பித்த பெண்!|Woman believes her cat has his dad’s soul!

“பூனையை மிகவும் சிறியதாக இருக்கும் போதே காப்பாற்றி வளர்த்தேன். என்னுடைய உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிடும் அளவிற்கு இருந்த பூனையோடு, இரண்டு வருடங்கள் கடந்து விட்டேன். இது கேட்பவர்களுக்கு விநோதமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் பென்ஜி என்னுடைய தந்தையின் மறுபிறப்பு என நான் நம்புகிறேன். பென்ஜியின் கண்களைக் காண்கையில், ஒரு பூனை என்பதைத் தாண்டி இன்னும் அதிகமாக என்னால் உணர முடிகிறது. ஆனால், என்னுடைய கணவர் இதை விநோதமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் உணர்கிறார்.எனக்கும் பூனைக்கும் உள்ள நெருக்கம் தன்னை பயமுறுத்துவதாகவும், சங்கடமான சூழலைத்…

1 93 94 95 96 97 211