Browsing: ஆரோக்கியம் | Health

நடிகர் சரத்பாபுவிற்கு ஏற்பட்ட செப்சிஸ் நோய்… அறிகுறி என்ன, யாரை பாதிக்கும்?| Sarath Babu contracted sepsis… Symptoms, Remedies

இதற்கும் அடுத்த நிலை, உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியால் தொற்றின் வீரியத்தையோ தொற்றையோ அழிக்க முடியாமல் போய், ஆன்டிபயாட்டிக், ஆன்டிவைரல் மாத்திரைகளாலும் அழிக்க முடியாத நிலையில், இந்தத் தொற்று உடல் உறுப்புகளை பாதிப்படையச் செய்யும். உதாரணமாக, சிறுநீர் பாதையில் கடுமையான தொற்று ஏற்பட்டிருந்தால், அது இரண்டு சிறுநீரகங்களையும் பாதிக்கும். மேலும், இதயத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. இதற்கும் அடுத்த கட்டமாக நுரையீரலை பாதிக்கும். இதைதான் ARDS (Acute Respiratory Distress…

மாதவிடாய் விடுப்பு: `பாலின சமத்துவம் நோக்கி பயணிக்கும் விகடன்,அரசும் நிறுவனங்களும் செயல்படுத்துமா?’ | Menstrual Leave – A Journey Towards Gender Equality

இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். `உனக்குத்தான் லீவ் குடுத்தாச்சே, நீ வீட்டில் இரு. வேலைக்கு வராதே. வசதிகளைக் கேட்காதே’ என்று சில பணியிடங்கள் பெண்ணுக்கான வசதிகளை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு இந்த விடுப்பை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய ஆபத்தும் வரலாம். மாதவிடாய் ஒரு நாளில் நின்றுவிடாது. குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு இருக்கும். ஒருநாள் விடுப்பு முடிந்து, மாதவிடாய் தொடரும்போதும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும். எனவே, நாப்கினை வைத்துக்கொள்ள அலமாரி, போதுமான தண்ணீர் வசதி, நாப்கினை அகற்றும்…

18 மாத குழந்தைக்கு வெட்டுக்கிளியே உணவு… தாய் கூறும் திடுக்கிட வைக்கும் காரணம்! |Woman Feeds Crickets To her Toddler in order to reduce grocery bill

குழந்தைகளுக்கு விதவிதமாக, பார்த்துப் பார்த்து உணவு வழங்கும் பெற்றோர் குறித்து கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தாய் ஒருவர் மளிகை சாமான் பில்லை குறைப்பதற்காக, தன்னுடைய 18 மாதக் குழந்தைக்கு, வெட்டுக்கிளிகளை உணவாக அளித்து வருகிறார்.கனடாவின் டொரன்டோ பகுதியில் வசித்து வருபவர் டிஃப்பனி லெய்க் ( Tiffany Leigh). இவர் உணவுகளைக் குறித்து எழுதி வருகிறார். சமீபத்தில் ஆசிய நாடுகளுக்குச் சென்றவர், சிலந்தியின் கால்கள், தேள்கள் என பொறித்த அனைத்தையும் உண்டு மகிழ்ந்திருக்கிறார். அவற்றின் சுவையும் அவருக்கு மிகவும்…

ஆபத்தான Bisphenol A… குழந்தை உடலில் சேராமல் பாதுகாப்பது எப்படி| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 18 | How to protect your child from dangerous Bisphenol A

பிஸ்பினால் ஏ-வினால் மருத்துவ பாதிப்புகள் ஏற்படுவது எப்படி?பிஸ்பினால் ஏ ஹார்மோன் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. தொடர்ந்து, பிஸ்பினால் ஏ-யின் அளவு உடலில் கூடும்போது, மலட்டுத் தன்மை, கருக்கலைப்பு, குறைப் பிரசவம், பிறக்கும் குழந்தையில் எடை குறைவாக இருப்பது போன்ற இனப்பெருக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். இவை தவிர்த்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல்பருமன், நீரிழிவு நோய், இதய நோய், மூளை வளர்ச்சியில் பாதிப்புகள், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு,…

Doctor Vikatan – 16 May 2014 – உச்சி வெயில்… உஷார் | consulting room

உச்சி வெயில்… உஷார்ஜி.ரவிச்சந்திரன், திண்டிவனம் ‘என் மகனுக்கு 10 வயது. சில சமயம் இரவில் தூங்கும்போது, படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறான். இதை எப்படி நிறுத்துவது?” டாக்டர் அருண்பாபு, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ‘ஐந்து வயது வரை ஒரு குழந்தை, படுக்கையில் சிறுநீர் கழித்தால் பயப்படத் தேவை இல்லை. ஐந்து வயதுக்குப் பிறகும் படுக்கையில் சிறுநீர் கழித்தால், என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும். ஒரு முறைகூட அவன்,…

என்ன தான் சாப்பிடுவது ? | My Vikatan | my vikatan article about healthy food habits

டாக்டர் அவரிடம் சைகையால் ‘அமைதி, அமைதி’ காண்பித்தவாறு “முதல்லெ எதுக்கும் டென்ஷன் படக்கூடாது. பெரிசா என்ன நடக்கும்? உசிரு போகும். அவ்வளவு தானே. நாளைக்கு போற உசிரு இன்னிக்கு போவுதுன்னு எடுத்துக்கணும்” .’அரிசி இல்லன்னா பரவாயில்லே, கோதுமை சப்பாத்தி சாப்பிடுங்கோ. கோதுமை சாப்பிட்டு பழக்கமில்லாமல் நீங்க கம்மியா சாப்பிடுவீங்க. உங்க வெய்ட்டும் கம்மி ஆகும்”.’எனக்கு குளுட்டன் அலர்ஜி. கோதுமை, பார்லி எல்லாம் ஒத்துக்காது. “‘ராகி சாப்பிடுங்க”தைராய்டு இருக்கே. ராகி சரி வராதுன்னு என் ஒயிப் சொல்றாளே. பால்…

குழந்தைகளுக்கு கண்ணில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ஒமிக்ரான் XBB.1.16 – இந்திய ஆய்வு சொல்வதென்ன? | Omicron subvariant XBB.1.16 may be effect babies eyes

ஒமிக்ரான் வைரஸின் மற்றொரு திரிபான XBB.1.16 வைரஸ், குழந்தைகளுக்கு கண்ணில் நோய்த்தொற்றை ஏற்படுத்துவதற்கான அபாயம் இருப்பதாக, இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.நம் நாட்டில் சமீப நாள்களாக கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவிட் பரிசோதனைகளை அதிகரித்து, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸின் மற்றொரு திரிபான XBB.1.16 வைரஸானது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கண் தொடர்பான நோய்த் தொற்றுகளையும் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம் என சமீபத்தில்…

Doctor Vikatan: வாகன வெளிச்சத்தால் ஏற்படும் கண் கூச்சம்… கண்களில் பிரச்னை இருப்பதன் அறிகுறியா? | doctor vikatan – Eye irritation caused by vehicle light…is it a sign of an eye problem?

Doctor Vikatan: சாலையில் செல்லும்போது எதிரில் வரும் வாகனங்களின் லைட் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்கிறது. சில மாதங்களாகத்தான் இந்தப் பிரச்னை இருக்கிறது. இது கண்களில் ஏதேனும் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறியா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.கண் மருத்துவர் விஜய் ஷங்கர்சாலையில் செல்லும்போது எதிரில் வரும் வாகன வெளிச்சத்தால் கண்கள் கூசுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கேள்வியில் உங்களுடைய வயதைக் குறிப்பிடவில்லை. நீங்கள் இளவயதுக்காரரா, வயதானவரா என்பதைப் பொறுத்து இந்தப் பிரச்னைக்கான காரணமும்…

How to: சிறுநீரகக் கல் ஏற்படாமல் தடுப்பது எப்படி? I How To Prevent Kidney Stones?

கடினமான உடற்பயிற்சி மேற்கொள்கையில் உடலில் இருந்து வெளியேறும் சில வகையான ரசாயனங்கள்கூட சிறுநீரகத்தை பாதிக்கும். ஜிம்முக்குச் செல்லும் இளைஞர்கள் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் சார்ந்து மருத்துவமனைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கு இது போன்று நிறைய காரணங்கள் இருக்கின்றன. என்ன காரணத்தால் கல் ஏற்பட்டது எனக் கண்டறிந்தால் அது எவ்வகையான கல் என்பதையும் கண்டறிய முடியும். தண்ணீர் தண்ணீர்…எப்போதெல்லாம் சிறுநீர் கழிக்கிறார்களோ அப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீர் பாதையில் உப்புப் படியாது என்பதால்…

1 91 92 93 94 95 211