Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: விழித்திரை விலகுமா… அதற்கு சிகிச்சை உண்டா? | Doctor Vikatan: Is there a cure for retinal detachment?

இந்தப் பிரச்னை வரப்போவதன் அறிகுறியாக, கண்களைச் சுற்றி ஃப்ளாஷ் அடிப்பதுபோல் உணர்வார்கள். கண்களில் ஏதோ பறக்கிற மாதிரி உணர்வார்கள். விழித்திரையின் நடுவில் மேகுலா என்ற பகுதி இருக்கும். அது பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்தமாக பார்வை இழப்பு ஏற்படும். பார்வை திடீரென குறைவதை வைத்து விழித்திரை விலகுவதை சம்பந்தப்பட்ட நபரால் உணர முடியும்.சற்றும் தாமதிக்காமல் அந்த நபர் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை மட்டுமே.விழித்திரைவிழித்திரை விலகல் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து…

இருதய நோயாளிக்கு புரோஸ்டேட் வீக்கம்; HoLEP லேசர் சிகிச்சையால் குணப்படுத்திய காவேரி மருத்துவமனை! | Prostate swelling – Kauvery Hospital cured by HoLEP laser therapy

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 63 வயது நபருக்கு ஏற்பட்ட புரோஸ்டேட் வீக்கத்தை, HoLEP லேசர் சிகிச்சை மூலம் துரிதமாக குணப்படுத்தியுள்ளது, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனை.சென்னையைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவருக்கு, கடந்த மே மாதம் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. சிகிச்சை முடிந்த சில நாள்களுக்குப் பின், அவருக்கு சிறுநீர்த்தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் புரோஸ்டேட் வீக்கம் ஏற்பட, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்த அவருக்கு, மருத்துவர்கள் மாத்திரைகளைப்…

நாயுடன் அதனை வளர்ப்பவரும் புற்றுநோய்; கைவிரித்த மருத்துவர்கள்… அடுத்து என்ன? |Man And Pet Diagnosed With Cancer

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரும், அவரின் செல்லப் பிராணி நாயும், சிறிது மாத கால இடைவெளியிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இங்கிலாந்தில் வசித்து வரும் சைமன் ஓ’பிரியன் என்பவர், பெல்லா என்ற லேப்ரடார் (Labrador) வகை நாயினத்தை வளர்த்து வந்துள்ளார். 8 வயதாகும் இந்த நாய்க்கும், இவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இருவரும் அதிக சோர்வாகவும், தாக உணர்வோடும் இருந்துள்ளனர்.புற்றுநோய்சிறுநீரகத்தில் கட்டி உருவான நிலையில், பரிசோதனை செய்ததில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். முதலில் நாய்…

கரூர்: ஆண்கள் குடும்பநல அறுவை சிகிச்சையில் 2-ம் இடம், சாதித்தது எப்படி? | Karur ranks 2nd in vasectomy

இதுகுறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேசிய சில அதிகாரிகள், “கரூர் மாவட்டத்தில் மாதாந்தர ஆய்வுகள் மேற்கொண்டபோது, நிறைய குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் அதிகம் இருப்பதைக் காண முடிந்தது. அதிலும், இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துள்ளது. அதேபோல், பலரும் குடும்பநல அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்தனர். அதனால், இங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தோம். பெண்களுக்குச் செய்யப்படும் டியூபெக்டமி குடும்பநல அறுவை சிகிச்சையை, அறுவைசிகிச்சை முறையிலோ, லேப்ராஸ்கோப்பி முறையிலோ செய்ய வேண்டும். ஆனால், இதுவே…

இளம் பெண்களை அதிகம் தாக்கும் `லூபஸ்' – தீர்வுகள் என்ன?

`நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி. அதற்கேற்ப நம்மை நாம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சரிவர பார்த்துக்கொள்வது, நம் முக்கிய கடமைகளில் ஒன்று. நாளுக்கு நாள் புதிதுபுதிதாக நோய்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. அவற்றில் பல நோய்கள் குறித்த விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. உதாரணத்துக்கு, `லூபஸ்’ என்று சொல்லப்படும் எஸ்எல்ஈ (சிஸ்டமிக் லூபஸ் எரிதமடோசஸ்). இது நம் உடலின் தலை முதல் கால் வரை எந்த உறுப்பை வேண்டுமானாலும் பாதிக்கும் தன்மை கொண்டது.Dr. S. Sham, M.B.B.S.,…

நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்த எம்.பி… கைதட்டி வாழ்த்திய இத்தாலி சபை உறுப்பினர்கள்!|Italian MP breastfeeds son in parliament

இத்தாலியின் நாடாளுமன்ற உறுப்பினரான கில்டா ஸ்போர்ட்டியெல்லோ (Gilda Sportiello) புதன்கிழமையன்று நாடாளுமன்ற சபைக்கு, கைகுழந்தையான ஃபெடரிகோவுடன் (Federico) சென்றுள்ளார். அப்போது நாடாளுமன்ற சபையில் தன்னுடைய குழந்தைக்குப் பால் கொடுத்துள்ளார்.அப்போது, சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி அவரின் மகன் ஃபெடரிகோ “நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும்” என்று வாழ்த்தி உள்ளார்கள்.நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்த எம்.பி!இத்தாலியின் நாடாளுமன்ற குழு, நவம்பர் மாதம் பெண் எம்.பி – க்கள் ஒரு வயது வரை உள்ள தங்கள்…

Doctor Vikatan: ஒரு காது கேட்காத நிலையில், இன்னொரு காதுக்கு மட்டும் ஹியரிங் எய்டு உதவுமா? | Doctor Vikatan: If one ear is deaf, can a hearing aid only help the other ear?

உங்கள் விஷயத்தில் ஒரு பக்க காது கேட்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கான காரணம் தெரிந்தால்தான், அதே காரணத்தால் இன்னொரு பக்க காதும் பாதிக்கப்படாமல் தடுப்பது சாத்தியமா என்று பார்க்க முடியும்.உதாரணத்துக்கு இன்ஃபெக்ஷன் காரணமாக ஒரு காது கேட்காமல் போயிருக்கும் சூழலில், அதே காரணத்தால் இன்னொரு காதும் கேட்காமல் போகாது. ஆனால் ஏற்கெனவே கேட்கும் திறனை இழந்த காதை சரி செய்ய முடியுமா என்று பார்க்கலாம். காது ஜவ்வில் ஓட்டை இருந்தாலும் காது கேட்காது. அடிக்கடி சளி பிடிப்பதால்…

குழந்தைக்கு தாழ்வெப்பநிலை ஏற்படாமல் இருக்க இதைச் செய்யுங்க …| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 24 | Do this to prevent hypothermia in the baby | Infant care 24

குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கிட வேண்டும் அல்லது குறைந்தது 30- 60 நிமிடங்களில் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைத்துவிட வேண்டும். தாய்ப்பாலை குழந்தை பிறந்தவுடன் விரைவாக அளிப்பதன் மூலம், குழந்தைக்கு போதுமான கலோரிகள் கிடைக்கும்; அதன்மூலம், தனது உடல்வெப்பத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். முதலில் கிடைக்கும் சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபாடிகள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.ரேடியன்ட் வார்மர் | பச்சிளம் குழந்தை பராமரிப்புபெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடனே அழுதுவிடும். ஆனால் பிறந்தவுடன் குழந்தை…

சுகாதாரமான உணவுக்கு… பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்! I World Food Safety Day I Visual Story

Representational Imageதினமும் நாம் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவை உண்பது முக்கியம். ஆனால் நம்முடைய சூழலுக்கு ஏற்ப ஏதோ ஒன்றை வாயில் திணித்துக் கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவோம்.அந்த வகையில் பாதுகாப்பான உணவின் முக்கியத்துவத்தை உணர்த்த `உலக உணவு பாதுகாப்பு தினம்’ ஆண்டுதோறும் ஜூன் 7 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உணவை உற்பத்தி செய்தல், தயாரித்தல், பரிமாறுதல், சேமித்து வைத்தல் என எந்த படிநிலையிலும் உணவு மாசடைவதற்கான பல சாத்தியக்கூறுகள் உண்டு. WHO – உலக சுகாதார நிறுவனம்இதனால்,…

1 75 76 77 78 79 211