Doctor Vikatan:பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்துபோன வெஜைனா: அறுவை சிகிச்சையில்லாத தீர்வு ஏதேனும் உண்டா?|Is there a non-surgical solution for a loose vagina after delivery?
வயதாக, ஆக பெண்களுக்கு அவர்களது உடலின் அத்தியாவசிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறையத் தொடங்கும். அதுவும் இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணம். இப்படிப்பட்ட நிலையில் இந்தப் பிரச்னைக்கு அறுவைசிகிச்சைதான் தீர்வாக பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பல பெண்களுக்கும் அதில் உடன்பாடு இருப்பதில்லை. இப்படிப்பட்ட பெண்களுக்காகவே லேட்டஸ்ட் சிகிச்சை ஒன்று வந்திருக்கிறது. அந்தச் சிகிச்சைக்கு “தெர்மிவா’ என்று பெயர். இதில் அறுவைசிகிச்சையே தேவையில்லாமல் வெஜைனா பகுதியின் தளர்வு சரிசெய்யப்படும். இதை ‘காபி பிரேக்’ நடைமுறை (coffeebreak procedure) என்றே சொல்லலாம். அவ்வளவு எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய சிகிச்சை இது. இந்த முறையில்…








