`அம்மாவுடன் நேரம் செலவிடுங்கள், அவர்களின் ஆயுள் அதிகரிக்கும்' – ஆய்வுத் தகவல்!
வயதாகும் போது பெரும்பாலான முதியவர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள். திணிக்கப்படும் தனிமை ஒரு கட்டத்தில் வாழ்வின் அங்கமாகவே மாறிவிடுகிறது. பேச ஆளில்லாமல், சிலர் தமக்குத் தாமே பேசிக் கொள்வதையும் கவனித்து இருக்கலாம்.இந்தநிலையில் `அம்மா மற்றும் பாட்டியை வெளியில் அழைத்துச் செல்வது, அவர்களின் ஆயுசு நாள்களை அதிகரிக்கும்’ என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. கலிஃபோர்னியா, சான் ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சராசரியாக 71 வயதுடைய 1,600 பெரியவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். சமூக பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தனிமையில் இருப்பவர்கள் அதிக…









