Doctor Vikatan: சர்க்கரையை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரிதானா? | Doctor Vikatan: Is a sugar free diet right?
பிறந்த குழந்தைக்கு ஒருவயது வரை தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறோம். 6 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து கஞ்சி உள்ளிட்ட இதர உணவுகளையும் ஆரம்பிக்கச் சொல்கிறோம். இந்த உணவுகளிலும் உப்போ, சர்க்கரையோ சேர்த்துப் பழக்காதீர்கள் என்றே அறிவுறுத்துவோம். சர்க்கரையே சேர்க்காததால் குழந்தைக்கு எனர்ஜியே இருக்காது என நினைக்கத் தேவையில்லை. பெரும்பாலான அம்மாக்களும் குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதுமே பிஸ்கட்டை பாலில் நனைத்தோ, தண்ணீரில் தோய்த்தோ கொடுக்கிறார்கள். அதனால் குழந்தை இனிப்புச்சுவைக்குப் பழக்கமாகிறது. ஒரு கட்டத்தில் இனிப்புக்கு அடிமையாகிவிடுகிறார்கள். சர்க்கரையே…





