துரை வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சஸ்பெண்ட்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு
சென்னை: துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்டச் செயலாளர்களை வைகோ சஸ்பெண்ட் செய்துள்ளார். சில மாதங்களுக்கு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ அமர்த்தப்பட்டார். பிறகு அப்பொறுப்பை மேலும் வலுப்படுத்தி, `தலைமைக் கழகச் செயலாளர்’ என்று பெயர்சூட்டி, அந்தப் பொறுப்புக்கு பொதுக்குழு ஒப்புதலும் பெறும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு அக்கட்சியில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.…









