4 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பணிகள் நடக்கவில்லை பாதாள சாக்கடை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்: பேரவையில் திமுக எம்எல்ஏ வரலட்சுமி வலியுறுத்தல்
சென்னை: நான்கு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசினார் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது செங்கல்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் (திமுக) பேசியதாவது:செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும், தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு வளர்ந்து வரும் பகுதியாக இருக்கிறது. நாளுக்குநாள் மக்கள் தொகை…









