‘’சில்க் ஸ்மிதாவுக்கு கவர்ச்சியாக நடிப்பதில் ஆசை இருந்ததில்லை’’ – டப்பிங் கலைஞர் ஹேமமாலினி

Share

சில்க்

‘’அவளுக்கு நடிகை சாவித்திரி ரொம்பப் பிடிக்கும். அவங்களை மாதிரி நடிப்பில் சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். கவர்ச்சியாக நடிப்பது என்பது அவளோட ஆசை இல்லை.’’ என்று சில்க் ஸ்மிதாவை நினைவுகூர்கிறார், மூத்த டப்பிங் கலைஞர் ஹேமமாலினி.

இந்திய சினிமாக்களில் ‘கிளப் டான்ஸ்’ என்பது 70களில் தான் பிரபலமானது. தென்னிந்திய சினிமாக்களில் கிளப் டான்ஸுக்கு பெயர்பெற்ற நடிகைகள் என்றால், ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி என அந்த வரிசையில் பலர் இருந்திருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் ஆண் ரசிகர்கள் விசிலடித்து வரவேற்றார்கள். ‘’என்னது இது… அரையும் குறையுமா,’’ என்று முகம் சுளிக்கும் பெண்களும் இருந்தார்கள்.

ஆனால் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கூட, அந்த நடிகையின் ஆட்டத்தையும், அழகையும் ரசித்தார்கள் என்றால், அது சில்க் ஸ்மிதாவைப் பார்த்துத்தான். பெண்களையும் கவர்ந்திழுத்த கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் ஐஸ்க்ரீம் குரலுக்கு சொந்தக்காரர் வேறொருவர் என்றால் நம்புவது கடினம் தான். உண்மையில் அந்தக் குரலுக்கு உரிமையாளர், டப்பிங் கலைஞர் ஹேமமாலினி தான்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com