`குரங்கு அம்மை’ நோய்க்கு புதிய பெயர் வைக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் குரங்கு அம்மை என தற்போது இருக்கும் பெயருக்கு மாற்றாக, எம்பாக்ஸ் (mpox) என்ற புதிய பெயரை வைத்துள்ளது.
சமீபத்தில் உலக மக்களிடையே பரவிய குரங்கு அம்மை (Monkey Pox) நோய்த்தொற்றால், கடுமையான காய்ச்சல், தலைவலி, சருமத்தில் அரிப்பு, நிணநீர் கணுக்களில் வீக்கம் போன்றவை ஏற்பட்டன. நோயின் தீவிரம் அதிகரித்து வேகமாகப் பரவியது. சில நாடுகள் அவசர நிலையைப் பிரகடனபடுத்தின.
அதேநேரம், பல நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்களும், நிபுணர்களும் `குரங்கு அம்மை’ என்ற பெயரை மாற்றியமைக்குமாறு உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.