டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (16.09.2020) ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உட்பட 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. நாளை தொடங்கும் இத்தொடர் நவம்பர் 13-ம் தேதி வரை நடைப்பெற இருக்கிறது. இதில் இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பவுன்ஸ் இருக்கும். அங்குள்ள மைதானம் மிகவும் பெரிதாக இருக்கும். அது சுழற்பந்து வீச்சாளர்களுக்குக் கைகொடுக்கும். ஆனால், 3 சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது கொஞ்சம் ஓவர். ஆடும் லெவனில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை வைத்துத்தான் விளையாட முடியும். இரண்டு பேர் என்பது ஒரு சாய்ஸாக இருக்கும். ஆனால் 3 பேர் என்பது அதிகம். அதில் யாரேனும் ஒருவருடைய இடத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் இருந்திருக்க வேண்டும். அது அணிக்குக் கூடுதல் வலுவைச் சேர்த்திருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.