இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பவானி தேவி பஞ்சாப் வீராங்கனை ஜகமீத் கவுரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய பவானி தேவி 15- 3 என்ற கணக்கில் எளிதாக வென்றார். அத்துடன் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
மேலும் பவானி தேவி முதல் முறையாக தமிழ்நாடு சார்பில் களமிறங்கி முதல் தேசிய போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்குமுன்பாக இவர் கொச்சியிலுள்ள விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி செய்து வந்ததால் 2011 மற்றும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் கேரளா சார்பில் களமிறங்கினார். அந்த இரண்டு முறையும் சேபர் பிரிவு வாள்வீச்சில் இவர் தங்கம் வென்று இருந்தார்.
Read more : டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகல்
இன்று இறுதிப் போட்டியில் பவானி தேவிக்கு எதிராக விளையாடிய ஜகமீத் கவுர் கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் வெண்கலம் வென்று இருந்தார். அந்தப் போட்டியில் சேபர் பிரிவில் பவானி தேவி தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.