asia cup 2022 fans exciting on upcomin india pak match suryakumar yadav batting

Share

ஆசியக் கோப்பை 2022 போட்டித் தொடரில் சூப்பர் 4 சுற்றில் அனேகமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதும்  வாய்ப்பே அதிகமுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று, அன்று சூரியகுமார் யாதவிடமிருந்து முதல் போட்டியில் தப்பியது பாகிஸ்தான். இந்த முறை அவரது 360 டிகிரி பேட்டிங்கிற்கு பாகிஸ்தான் சிக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஆயிரம் டீமுக்கு எதிராக என்ன அடித்தாலும் பாகிஸ்தான் பவுலிங்கை பின்னி எடுப்பதுதான் இந்திய ரசிகர்களுக்கு நீங்காத நினைவுகளையும் மனமகிழ்ச்சிகளையும் தரும் என்பது காலங்காலமாக இருந்து வரும் ஓர் உணர்வு.

டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா பாய்ச்சல்

கடைசி டி20 போட்டியில் ஹாங்காங் பவுலர்கள் சிக்கியது போல் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் பவுலர்களைப் புரட்டி எடுக்க வேண்டும் என்பதாலேயே சூப்பர் 4 போட்டி வரும் ஞாயிறன்று சுவாரசியம் கொண்டுள்ளது.

ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் சூர்யா 26 பந்துகளில் 68 ரன்களை குவித்தார்.

ஆனால் இதில் சூரியகுமார் யாதவுக்கு கிடைக்கவிருக்கும் ஒரு மெகா வாய்ப்பு என்னவெனில், அவர் ஐசிசி டி20 தரவரிசையில் பாபர் ஆசமைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிப்பாரா என்ற ஆர்வம் இப்போது தலைதூக்கியுள்ளது.

டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு: அதிரடி வீரர் நீக்கத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தான் கடந்த ஓராண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார். முகமது ரிஸ்வான் 2வது இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரையும் முந்தி முதலிடத்தை சூர்யகுமார் யாதவ் பிடிக்க வாய்ப்புள்ளது.

பாபர் அசாம் தற்போது வரை 818 புள்ளிகளுடன் இருக்கிறார். இவரை தொடர்ந்து முகமது ரிஸ்வான் 796 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 792 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் இருக்கிறார். இன்னொரு அதிரடியை சூரியகுமார் யாதவ் போட்டாரென்றால், அதுவும் சேசிங்கில் போட்டாரென்றால் நிச்சயம் இவர்களைக் கடந்து முதலிடம்பிடிப்பார். அதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com