தங்கம் வென்று வரலாறு படைத்தார் இந்திய வீரர் மைராஜ் அகமது கான் – News18 Tamil

Share

46 வயதான மூத்த இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீரர் மைராஜ் அகமது கான் ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் ஆடவர் ஸ்கீட் பிரிவில் முதன் முதலாக தங்கம் வென்று வரலாறு படைத்தார்.

40 ஷாட்கள் கொண்ட இறுதிப் போட்டியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரான மைராஜ் அகமது கான் 37 முறை சரியாகச் சுட்டு தங்கம் வென்றார். கொரியா வீரர் மின்சு கிம் 36 புள்ளிகளுடன் வெள்ளியும் பிரிட்டனின் பென் லெவெலின் 26 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர்.

குவாலிஃபை ஆவதற்கு மைராஜ் அகமது கான் 125 முயற்சிகளில் 119 புள்ளிகள் பெற்றார். இது இவரது முதல் தங்கம் ஆகும்.இவர் இருமுறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார் 2016-ல் ரியோ டி ஜெனீரியோவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் வெள்ளி வென்றுள்ளார்.

முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த அஞ்சும் மோட்கில், ஆஷி சவுக்சீ, சிப்ட் கவுர் சாம்ரா, 50 மீ ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினர். இவர்கள் ஆஸ்திரியாவைச் சேர்ந்த வீரர்களை வென்றனர்.

திங்களன்று பெற்ற ஒரு தங்கம் மற்றும் 3 வெள்ளிகளுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 13 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 5 தங்கம் 5 வெள்ளி, 3 வெண்கலம் இதில் அடங்கும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com