ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்களை ஒடுக்க தாலிபன் முயற்சியா? புதிய குற்றச்சாட்டு

Share

ஆப்கானிஸ்தான், தாலிபன், ஷியா - சுன்னி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காபூலில் உள்ள ஒரு மூத்த ஷியா மதகுரு தாலிபன் தங்களைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டினார் (சித்தரிப்புப் படம்)

ஆப்கானிஸ்தானில் ஷியா சமூகத்தின் மீதான தனது கட்டுப்பாடுகளை தாலிபன் அரசு படிப்படியாக அதிகரித்துள்ளது.

சமீபத்தில் காபூலில் உள்ள ஒரு மூத்த ஷியா அறிஞர், தற்காலிக திருமண(நிக்காஹ்-ஏ-முத்ஆ) ஒப்பந்தம் செய்ததற்காக தாலிபன் தங்களை அழைத்து விசாரித்ததாகவும், தங்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கம் ஷியா ஜாஃபரி ஃபிக்ஹ் (மதச் சட்ட பாரம்பரியம்)-இல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் சுன்னி ஹனஃபி ஃபிக்ஹ்-இல் (Sunni Hanafi Fiqh) இல்லை.

தாலிபனுக்கு முந்தைய ஆப்கான் அரசால் ஜாஃபரி ஃபிக்ஹ் (Shia Jafari Fiqh)அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் தாலிபன் அரசு முந்தைய அரசின் சட்டம் ஒழுங்கு முறையை ரத்து செய்துவிட்டு, ஹனஃபி ஃபிக்ஹை மட்டுமே ஊக்குவித்தது.

‘தற்காலிக திருமண ஒப்பந்தம் செய்ததற்காக சம்மன்’

காபூலில் உள்ள மூத்த ஷியா அறிஞர் ஆயத்துல்லா ஹுசைன்தாத் ஷெரீஃபி, தற்காலிக நிக்காஹ் ஒப்பந்தம் செய்ததற்காக தாலிபன் அதிகாரிகள் தங்களை அழைத்துக் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார், அதே சமயம் இது ஷியா ஜாஃபரி ஃபிக்ஹ்-இல் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com