நான்கு வீரர்கள் டக் அவுட்; 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த டெல்லி; மாஸ் காட்டும் RCB |“Delhi Collapse Shocker: 4 Ducks, 6 Wickets Lost for 8 Runs as RCB Run Riot”

Share

கடந்த போட்டியில் 152 ரன்கள் அடித்து சாதனை படைத்த கே. எல்.ராகுல் இந்த போட்டியில் ஜொலிப்பார் என எதிர்பார்க்க… அவரும் 1 ரன் எடுத்து நடையை கட்டினார்.

புவனேஸ்வர் மற்றும் ஹேசில்வுட் கூட்டணியின் வேகத்தில் டெல்லி பேட்ஸ்மேன்கள் வரிசையாக நிலைகுலைந்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர் (49) என்ற ‘ப்ளாக் மார்க்’ தற்போது பெங்களூரு வசம் உள்ளது. அதை எப்படியாவது இன்று டெல்லி கணக்கிற்கு மாற்றிவிட்டு, அந்தச் சாபத்தை நீக்க வேண்டும் என ஆர்.சி.பி பந்துவீச்சாளர்கள் அனல் பறக்க விடுகிறார்கள்.

பவர் பிளே முடிவில் 11 ரன்களுக்கு 6 விக்கெட்! டெல்லி ரசிகர்கள் தலையில் துண்டை போட்டுக்கொள்ள, ஆர்.சி.பி ரசிகர்கள் ‘மொமண்டம்’ மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். 49 ரன்களைத் தாண்டுவதே டெல்லிக்கு இப்போது இமயமலை ஏறுவது போலத்தான். ஆர்.சி.பி சார்பில் புவி 3 விக்கெட்டுகளையும் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com