அப்பல்லோ vs ஆர்டெமிஸ்: பூமி 58 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது?

Share

அப்பல்லோ vs ஆர்டெமிஸ்: பூமி 58 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது?

பட மூலாதாரம், NASA

கடந்த 1968ஆம் ஆண்டில், அப்பல்லோ 8 விண்வெளிப் பயணத்தின்போது, விண்வெளி வீரர்கள் புகழ்பெற்ற ‘எர்த் ரைஸ் (பூமி உதயம்)’ புகைப்படத்தை எடுத்தனர். இப்போது ஆர்டெமிஸ்-2 பயணத்தில் ஈடுபட்ட விண்வெளி வீரர்கள் ‘எர்த்செட் (பூமி மறைவு)’ என்ற புதிய புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், காலப்போக்கில் பூமி எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை அறிய முடியுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அப்பல்லோ 8 விண்கலத்தின் கமாண்டரான ஃபிராங்க் போர்மேன், 1968இல் தனது விண்கலத்தில் இருந்து நிலவின் மறுபக்கத்தைப் பார்த்தபோது, அதன் மேற்பரப்பு உயிரற்றதாகவும் சிதைந்த நிலையிலும் இருந்ததாகக் கூறினார்.

கடந்த 2018இல் பிபிசிக்கு அவர் அளித்த நேர்காணலில், “நிலவின் மேற்பரப்பு விண்கல் மோதியதால் ஏற்பட்ட பள்ளங்களாலும் எரிமலைச் சாம்பலின் எச்சங்களாலும் மிகவும் சிதைந்து போயிருந்தது. அது சாம்பல், கருப்பு அல்லது வெள்ளை ஆகிய நிறங்களில் மட்டுமே காணப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் வேறு எந்த நிறமும் அறவே இல்லை, அது நம்பவே முடியாத அளவுக்குச் சீர்குலைந்த நிலையில் இருந்தது,” என்று தெரிவித்தார்.

ஆனால், அந்த விண்கலம் நிலவை நான்காவது முறையாகச் சுற்றி வந்தபோது, ஓர் அசாதாரணமான காட்சி தென்பட்டது. அதுகுறித்துப் பேசிய ஃபிராங்க் போர்மேன், “நாங்கள் மேலே நோக்கினோம். அங்கே நிலவின் மேற்பரப்புக்குப் பின்னணியாக பூமி மேலெழுந்து வருவதைக் கண்டோம். அப்போது பில் ஆண்டர்ஸ் எடுத்த புகைப்படம், மனிதகுலம் இதுவரை எடுத்த மிக முக்கியமான படங்களில் ஒன்றாகப் பிற்காலத்தில் போற்றப்பட்டது,” என்று குறிப்பிட்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com