RCB vs LSG: "க்ருணால் பாண்டியா பந்தை எப்படி வீசுவார் என்று எனக்கே தெரியாது" – ரஜத் பட்டிதார்

Share

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற பெங்களூரு vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி ஒன் சைடு போட்டியாக அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ 147 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதை 15.1 ஓவர்களிலே எட்டி பிடித்து அபார வெற்றி பெற்றது பெங்களூரு அணி.

rcb vs lsg
rcb vs lsg

போட்டிக்குப் பிறகு வெற்றி குறித்து பேசிய பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார், “எங்களது பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. டாஸ் வென்றது எங்களுக்குச் சாதகமாக அமைந்தது என்று நினைக்கிறேன்.

க்ருணால் பாண்டியா மிகவும் தைரியமான பந்துவீச்சாளர். அவர் அடுத்த பந்தை எப்படி வீசுவார் என்று எனக்கே தெரியாது, அதே நேரத்தில், சுயாஷின் ‘ஸ்டம்ப்-டு-ஸ்டம்ப்’ பந்துவீச்சு பார்க்க பிரமாதமாக இருந்தது.

புவனேஷ்வர் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் பந்துவீச்சு பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு கேப்டனுக்கு டி20 லீக் போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் கிடைத்தால் அது வேலையை எளிதாக்கும், ஏனென்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் அவர்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

rcb vs lsg
rcb vs lsg

அவர்களின் அனுபவமும் யோசனைகளும் மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் உதவுகின்றன. ஐபிஎல் தொடக்கத்திலிருந்தே, நாங்கள் ஃபீல்டிங்ல் கவனம் செலுத்தி வருகிறோம்.

பட்டத்தை வெல்வதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. தற்போது, நாங்கள் ஒரு நேரத்தில் ஒரு போட்டியை மட்டுமே உற்று நோக்குகிறோம்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com