“எதுக்கு சார் ஓட்டு போடணும், இவனுங்க திங்கறதுக்கா”, ” நான் ஒருத்தன் ஓட்டு போடலேன்ன குடியா முழுகிடும், எப்படி இருந்தாலும் ஒரு நல்லவன் வரப்போறதில்ல” என்றெல்லாம் புலம்ப வேண்டாம். சிறு துளிதான் பேரு வெள்ளம். உங்களை போலவேதான் இன்னும் பல பேர் எண்ணுவார்கள். அந்த எண்ணங்கள் ஒரே மாதிரிதான் இருக்கும், ஆனால் யாரும் வெளிக்காட்டாமல் “நாம சொல்றத எவன் கேப்பான்?” என நமக்குள்ளேயே புலம்பிக் கொள்கிறோம்.

உப்புமா கதை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒரு கல்லூரி விடுதியில் தினந்தோறும் மாணவர்களுக்கு உப்புமாவை ஹாஸ்டல் நிர்வாகம் வழங்கி வருகிறது. உப்புமாவை மாணவர்கள் உண்ண முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். அணைத்து மாணவரக்ளும் சேர்ந்து விடுதி நிர்வாகத்திடம் முறையிட்டு, போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
விடுதி மாணவர்கள், நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்து அவர்களது வேண்டுகோளை கேட்டு உள்ளனர். அப்போது மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு உப்புமா வேண்டாம் எனவும், அதற்கு மாற்றாக வேறு உணவு வேண்டும் எனவும் கேட்டு உள்ளனர்.
விடுதி நிர்வாகம் என்ன உணவு வேண்டும் என ஒரு வாக்கெடுப்பு நடத்தி உள்ளது. அந்த வாக்கெடுப்பில், 7 சதவீத மாணவர்கள் ஆம்லெட் செய்துள்ளனர். 18 சதவீதம் பேர் பரோட்டா வேண்டும் எனவும், 13 சதவீத மாணவர்கள் பூரிக்கும் தங்கள் வாக்குகளை தெரிவித்து உள்ளனர்.
20 சதவீத பேர் மசாலா தோசைக்கும், 19 சதவீத பேர் இட்லி வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 23 சதவீத மாணவர்கள் உப்புமாவிற்கே வாக்கு அளித்துள்ளனர். இதனால் அதிக வாக்கு பெற்று உப்புமா ஜெயித்து விட்டது.
நடைமுறையில் வாக்களிக்காத சில பேரும் இருப்பார்கள். எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணுபவர்களும் இருந்திருப்பார்கள். அதே போலத்தான் இங்கும். எதுவாக இருந்தாலும் என்பதை விட, யாரும் இல்லை என்பதை தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் சரி எல்லா உணவையும் மாற்றி மாற்றி போடலாம் என்று முடிவெடுப்பார்கள். ஆனால், வாக்களிப்பது முக்கியம்.
“என் ஒருத்தன் ஓட்டு என்னத்த மாத்திட போகுது” என்று எண்ணாதீர்கள். நம் வீட்டின் சுவரில் ஒரு செங்கல் இல்லையென்றால் என்ன வீடா இடிந்து விடும்? அதே போலத்தான் நமது வாக்கும்.
கட்டாயம் வாக்களிப்போம்