‘கற்காலத்துக்கு அனுப்பிவிடுவோம்’ – டிரம்ப் மிரட்டலுக்கு இரானில் என்ன எதிர்வினை?

Share

'கற்காலத்துக்கு அனுப்பிவிடுவோம்' - டிரம்ப் மிரட்டலுக்கு இரானில் என்ன எதிர்வினை?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரானை கடுமையாக தாக்கி அந்நாட்டை ‘கற்காலத்திற்கே’ அனுப்பிவிடுவோம் என்று டொனால்ட் டிரம்ப் நேற்று மிரட்டல் விடுத்தார்.

தனது ட்ரூத் சோசியல் பதிவில், இரானின் ‘புதிய ஆட்சியின் அதிபர்’ போர்நிறுத்தம் கோரியதாக டிரம்ப் தெரிவித்தார்.

‘”ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டு மிகவும் சுதந்திரமாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தால் மட்டுமே நாங்கள் பரிசீலிப்போம் (போர் நிறுத்தத்தை). அது நடக்கின்றவரை நாங்கள் இரானை முழுமையாக அழித்து அவர்களை ‘கற்காலத்திற்கே’ அனுப்பிவிடுவோம்,” எனத் தெரிவித்தார் டிரம்ப்.

'கற்காலத்துக்கு அனுப்பிவிடுவோம்' - டிரம்ப் மிரட்டலுக்கு இரானில் என்ன எதிர்வினை?

பட மூலாதாரம், Getty Images

இரான் மக்கள் நினைப்பது என்ன?

பிபிசி பாரசீக சேவையின் கோன்சே ஹபீபியாசாத்திடம் பேசிய தெஹ்ரானில் வசிக்கும் தனது 20 வயதுகளில் உள்ள ஒரு பெண், ” என்னை பொறுத்தவரை கூற்று முற்றிலும் சாத்தியமற்றது. தற்போதைய கலாசாரம், மக்கள் தொகை, பொருளாதார அமைப்புகள், மேலும் அதன் வரலாற்றுப் பின்னணியை கருத்தில் கொண்டால், இரானுக்கு மீண்டும் கட்டியெழுப்பும் வலுவான திறன் உள்ளது” என கூறுகிறார்.

அதே நேரத்தில், தெஹ்ரானில் உள்ள தனது 20 வயதுகளில் உள்ள மற்றொரு பெண், ”அவர் அப்படி செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். ஆனால் அவர் எண்ணெய், ஆற்றல் துறைகள், உட்கட்டமைப்புகள் எல்லாவற்றையும் தாக்கி முற்றிலும் அழித்துவிடக் கூடும் என்ற பயம் எனக்கு உள்ளது. அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மிகவும் நீண்ட நேரம் ஆகும்” என்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com