LSG vs DC: ’26 ரன்களுக்கு 4 விக்கெட்’ – இக்கட்டான சூழலில் டெல்லி அணிக்கு கைகொடுத்த இருவர் யார்?

Share

ஐபிஎல், டெல்லி, லக்னௌ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படபடம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐ.பி.எல் தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

142 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல், பதும நிசரங்கா முறையே 0, 1 என்ற ரன்னுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

நிதிஷ் ராணாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் சமீர் ரஸ்வி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார்.

அடுத்து வந்த கேப்டன் அக்ஸர் படேலும் டக் ஆவுட் ஆக, டெல்லி அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மிக இக்கட்டான சூழலில் இருந்தது.

அடுத்து களம் இறங்கிய ஸ்டுப்ஸ், சமீர் ரஸ்வியுடன் கைகோர்க்க அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது. இருவரும் சேர்ந்து 76 பந்துகளுக்கு 119 ரன்களை குவித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com