ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் – மத்திய அரசு அளித்த புதிய தகவல்

Share

இந்தியக் கொடியை ஏந்திய இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடிந்தது (சித்தரிப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியக் கொடியை ஏந்திய இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடிந்தது (சித்தரிப்புப் படம்)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை தொடர்ந்து, மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் இரண்டு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன.

இந்திய வெளியுறவு அமைசகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெர்ஸ்வால் சனிக்கிழமை இத்தகவலை அளித்தார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “இந்தியாவுக்கு வரக்கூடிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன. ஷிவாலிக், நந்தா தேவி எனும் இரண்டு இந்திய கப்பல்கள், ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன, அவை தற்போது இந்திய துறைமுகங்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.” என்றார்.

இரு கப்பல்களிலும் தலா 46,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான எல்பிஜி எரிவாயு என, மொத்தமாக சுமார் 93,000 மெட்ரிக் டன்கள் எரிவாயு உள்ளது என அவர் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பாக வெளியுறவு துறை, பெட்ரோலிய துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த தகவலை தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com