சமையல் சூப்பர் ஸ்டார்: பச்சரிசி அடை, லாப்ஸி, பாயாசம் – அதிரடி காட்டிய நெல்லை போட்டியாளர்கள்

Share

திருநெல்வேயில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – சீசன் 3 நெல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று நிறைவுபெற்றது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர். தாங்கள் சமையல் செய்து எடுத்து வந்த உணவுகளை முதல் சுற்றில் காட்சிப்படுத்தினர்.

திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார்

தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரலமான செஃப் தீனா நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்றார். போட்டியாளர்கள் காட்சிப்படுத்திய உணவுகளை தீனா சுவைத்துப் பார்த்து, மதிப்பெண் வழங்கினார். உணவின் சுவை, அதன் ஆரோக்கியப் பயன்கள், டிஸ்பிளே செய்த முறை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டனர்.

அந்த வகையில் அதிக மதிப்பெண் பெற்ற ஷியாமா, முத்துலட்சுமி, சுதா, ரஹ்மத் நிஷா, மணிமாலா, சுந்தரி, பேச்சி பிரம்மாச்சி, தேவி பாரதி, சுஜிதா பேகம், அஸ்வினி ஆகிய பத்து பேரும் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வு செய்யப்படனர். இதில் தேர்வாகியிருந்த பத்து நபர்களும் நேரடி சமையல் சுற்றில் பங்கேற்றனர்.

திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார்

இரண்டாம் சுற்றில் ஒரு மெயின் டிஷ், ஒரு கிரேவி, ஓர் இனிப்பு என்று மூன்று உணவு வகைகளை ஒரு மணி நேரத்துக்குள் சமைக்க வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை. பத்து பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பரபரப்பாக சமையல் செய்யத் தொடங்கினர்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போட்டியாளர்கள் சமைத்த உணவை சுவை பார்த்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்தார் செஃப் தீனா. அதன்படி,

பச்சரிசி அடை, சௌசௌ சட்னி மற்றும் இனிப்பு கேப்பை களி சமைத்த பேச்சி பிரம்மாச்சி, லாப்ஸி, ராகி பொங்கல், சிக்கன் கிரேவி ஆகியவற்றைச் சமைத்த சியாமா, ஜவ்வரிசி பாயாசம், வெஜ் புலாவ் மற்றும் சிக்கன் கிரேவி ஆகியவற்றை சமைத்த சுதா ஆகிய மூன்று பேரும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார்

இவர்கள் சென்னையில் நடைபெறும் மாபெரும் இறுதிச் சுற்றில் பங்கேற்பார்கள். தேர்வு செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நேரடி சமையலில் பங்கேற்ற மீதமுள்ள ஏழு நபர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com