"நெல்லை சாம்பார்… ஒவ்வொரு வீட்டிலும் தனிச்சுவை" – சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் செஃப் தீனா

Share

சமையல் திறனை வெளிப்படுத்துவதற்கான அற்புதமான களத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது அவள் விகடன். சக்தி மசாலா வழங்கும் ‘சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார்
திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார்

விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம், கோவை மற்றும் மதுரையைத் தொடர்ந்து திருநெல்வேலியில் இன்று நடைபெற்று வருகிறது.

நெல்லை சந்திப்புக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஆர்யாஸில் போட்டி தொடங்கி, நடைபெற்று வருகிறது. போட்டியின் நடுவரான செஃப் தீனா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய தீனா, “திருநெல்வேலி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இன்னைக்கு இந்த நிகழ்ச்சிக்குப் புதுசு புதுசா மக்கள் வந்திருக்கீங்க.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கைப்பக்குவம் உண்டு. ஒவ்வொருத்தர் வீட்டிலும் சாம்பார் ஒவ்வொரு கைப்பக்குவத்துல இருக்கும்” என்று சிலாகித்துப் பேசினார்.

திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார்
திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார்

தூத்துக்குடி, கடலூர், சாந்தி நகர், குலவணிகர்புரம், பாளையங்கோட்டை, வி.எம். சத்திரம், செய்துங்கநல்லூர், நரசிங்கநல்லூர், உடையார்பட்டி, சுத்தமல்லி, ரெட்டியார்பட்டி, ஆழ்வார்குளம், ராமையன்பட்டி, குறிச்சி போன்ற திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மற்ற ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர்.

பீட்ரூட் பச்சடி, மாங்காய் மோர், சங்குப்பூ சாதம், அன்னாசிப் பழ பச்சடி, கேரட் புட்டிங், கேரட் அமலா பாத், மட்டன் தக்கடி, சுக்கு களி, மூங்கில் அரிசிக் கஞ்சி போன்ற பல்வேறு வகையான உணவுகளை போட்டியாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார்
திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார்

உணவுகளை ருசி பார்த்து செஃப் தீனா மதிப்பெண் வழங்கி வருகிறார். முதல் சுற்றில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள், நேரடி குக்கிங்கில் பங்கேற்பார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com