செப்சிஸ்: நாய் நக்கியதால் இவரது இரு கை, கால்களையும் அகற்றும் நிலை வந்ததா? மருத்துவர் விளக்கம்

Share

ஏழு மாத கால சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மஞ்சித் சங்கா, செப்சிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார்.
படக்குறிப்பு, ஏழு மாத கால சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மஞ்சித் சங்கா, செப்சிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார்.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சில வாசகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய படங்கள் உள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த மஞ்சித் சங்கா மருத்துவமனையில் 32 வாரங்கள் கழித்த பிறகு, இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை இழந்து, வீடு திரும்பியுள்ளார்.

56 வயதான அவர் உயிர் பிழைப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என மருத்துவர்கள் நினைத்த போதிலும், அவர் சில தினங்களுக்கு முன்பு பர்மிங்ஹாமில் உள்ள மோஸ்லி ஹால் வார்டு 9-ல் இருந்து வீடு திரும்பினார். வுல்வர்ஹாம்ப்டன்/ஸ்டாஃபோர்ட்ஷையர் எல்லையில் உள்ள பென்னில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒரு சிறிய வெட்டு அல்லது சிராய்ப்பின் மீது அவரது நாய் நக்கியது போன்ற ஒரு சாதாரண விஷயம் அவரது செப்சிஸுக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

அவர் குணமடைந்து தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கும் நிலையில், செப்சிஸ் “யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்” என்று அவர் நம்புவதால், இப்போது மற்றவர்களுக்கு அதன் ஆபத்து குறித்து எச்சரிக்க விரும்புகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com