எஸ்ஐஆர்-க்கு பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க இனி விண்ணப்பிக்க முடியுமா?

Share

எஸ்ஐஆர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்

பட மூலாதாரம், Getty Images

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆர்.) பிந்தைய, இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் இன்று வெளியிடப்பட்டது.

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பிருந்த வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 5,67,07,380 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்ட நிலையில், “இதற்குப் பின்னும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம்” என்று தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் அல்லது இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தந்த தகவலின்படி, இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பது பற்றி விளக்குகிறது இந்தத் தொகுப்பு.

74 லட்சம் வாக்காளர்கள் குறைவு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 4 என்று காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதன்பின் கணக்கீட்டுப்படிவம் சமர்ப்பிப்பதற்கு டிசம்பர் 14 இறுதிநாளாக அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com