T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியின் 3 முக்கிய தருணங்கள்

Share

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை எட்டாவது முறையாக வீழ்த்தியது இந்தியா.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கொழும்புவில் நடந்த இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்த இரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் பெறப்பட்டிருக்கும் வெற்றி இதுதான்.

தேர்ந்தெடுத்து தெளிவாக ஆடிய இஷான் கிஷன்

இந்திய அணியின் வெற்றியில் இஷான் கிஷனின் பேட்டிங் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிரடியாக விளையாடிய அவர், 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் முதல் ஓவரின் முடிவில் இந்தியா 1/1 என்ற நிலையில் இருந்தது. ஆனால், எந்தவித நெருக்கடியையும் உணராமல் தன் வழக்கமான அதிரடி பாணியில் ஆடினார் இஷான் கிஷன். அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்த அடுத்த பந்தே, ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் அவர் சிக்ஸர் அடித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com