‘தமிழ் படித்தால் பிச்சை எடுக்க கூட உதவாது’ சர்ச்சை – பெரியார் உண்மையில் கூறியது என்ன?

Share

பெரியார், தமிழ், கமல்ஹாசன், நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், SAMSAD TV

‘தமிழைப் படித்தால் பிச்சை எடுக்கக்கூட உதவாது’ என நாடாளுமன்றத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாகக் கூறி மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் அதற்கு எதிர்வினையாற்றினார் . இந்த விவகாரத்தில் ஒவ்வொருவர் பேசியது குறித்தும் சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் நிலவுகின்றன. உண்மையில் யார் என்ன சொன்னார்கள்?

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன், பிப்ரவரி நான்காம் தேதி தனது முதல் உரையை நிகழ்த்தினார். அந்த உரையின் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைக் குறிப்பிட்டு பேச ஆரம்பித்தார் கமல். “பிரிய சகோதரி, பவதிபிச்சாந்தேகி என்று தெலுங்கில் இசைபாடி வந்த அந்த மாமனிதர், இசைமேதை தியாகராஜன். அவர் பிக்ஷா பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள். நீங்கள் வெள்ளைக்காரக் கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

அதன் பிறகு உங்கள் பிச்சைப் பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக் குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்கிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஓரளவு உண்மைதான். ஒரு தெற்கத்தி அறிவுரை தந்தாய். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே. தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்.” என்று குறிப்பிட்டார்.

அவரது இந்தப் பேச்சு குறித்து செய்தி வெளியானபோது, தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என நிர்மலா சீதாராமன் கூறியதாகவும் அதற்கு கமல்ஹாசன் பதிலளித்ததாகவும் சில ஊடகங்கள் குறிப்பிட்டன. இதையடுத்து நிதியமைச்சரின் அலுவலகம் இது குறித்து விளக்கமளித்தது. அதாவது, “கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வில், நிதியமைச்சர் அவர்கள் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களின் கூற்றையே தெளிவாக மேற்கோள் காட்டினார்; அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல” என அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

பெரியார், தமிழ், கமல்ஹாசன், நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், SANSAD TV

நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?

2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், தேசிய கல்விக் கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக விவாதம் நடந்துவந்தது. இந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழக அரசை பொறுத்தவரை, அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்புடன் செயல்படவில்லை” என்று கூறியதோடு வேறு சில வார்த்தைகளையும் தெரிவித்திருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com