1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 189 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்டவீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு முதன்முறையாக ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்நிலையில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது. எனினும், இதற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே, உக்ரைன் போர் காரணமாக செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது சீனாவும் போட்டியில் இருந்து விலகியுள்ளதால் இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.