பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சியாக பேசியவை இங்கே.
ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது, “‘ரொம்பவே பெருமையாக இருக்கிறது. என்னாலயே நம்பவே முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் எதை எதிர்பார்த்தோமோ அது நடந்திருக்கிறது. இந்தத் தொடரில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். ஆனால், செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம். எங்களுக்கு சாதகமான ரிசல்ட்டை மட்டுமே கொடுக்கும் வகையிலான பெர்பார்மென்ஸை கொடுக்க வேண்டிய நாள் இது.