Dhoni :’ஆஸ்திரேலியாவில் அசத்திய தோனி; 38 வயதில் மேன் ஆப் தி சீரிஸ் வாங்கிய சம்பவம் நியாபகம் இருக்கிறதா? | “Dhoni dazzled in Australia remember the time when he won the Man of the Series award at the age of 38?”

Share

சிட்னி மேட்ச்

அந்தத் தொடரின் முதல் போட்டி சிட்னியில் நடந்திருக்கும். இந்திய அணி தோற்றிருக்கும். ஆனால், இந்தப் போட்டியிலும் தோனி அரைசதம் அடித்திருப்பார். 96 பந்துகளில் 51 ரன்களை அடித்திருந்தார். எதோ டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடியதை போல இருக்கும். ஆனால், அந்தப் போட்டியில் தோனி அப்படித்தான் ஆட வேண்டியிருந்தது. ஏனெனில், இந்திய அணிக்கு 289 ரன்கள் டார்கெட். ஆனால், இந்திய அணி 4-3 என மிக மோசமான நிலையில் இருந்தது. ஜை ரிச்சர்டசன் ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார். அந்த இக்கட்டான சூழலில் இறங்கி, மேற்கொண்டு விக்கெட் விழாமல் ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் போட்டு 137 ரன்களை சேர்த்திருப்பார். போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தாலும், ஒரு சவாலை கொடுக்க தோனியின் இந்த இன்னிங்ஸ் முக்கியமானதாக இருந்தது.

தோனி - ரோஹித் ஷர்மா

தோனி – ரோஹித் ஷர்மா

அடிலெய்ட் போட்டி

அடிலெய்டில் அடுத்த போட்டி. இந்த முறை டார்கெட் இன்னமும் அதிகம். இந்திய அணி 299 ரன்களை எடுக்க வேண்டும். கோலிக்கு பிடித்த மைதானம் என்பதால், வழக்கம்போல அவர் நின்று ஆடி சதமடித்திருப்பார். இந்தப் போட்டியிலும் தோனி மிக முக்கியமான பார்ட்னர்ஷிப்களை அமைத்திருப்பார். கோலியுடன் சேர்ந்து 82 ரன்களையும் தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்து 57 ரன்களையும் சேர்த்திருப்பார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com