டெல்லியில் நடைபெற்றுவரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்; மைதானத்திற்குள் நுழைந்து கென்ய அதிகாரியைக் கடித்த தெருநாய் | World Para Athletics Championships underway in Delhi; Stray dog ​​enters stadium

Share

டெல்லியில் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. இதற்காக 2,200-க்கும் மேற்பட்ட சர்வதேச பாரா தடகள வீரர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை தந்திருக்கின்றனர்.

செப்டம்பர் 26 அன்று தொடங்கிய இந்த ஒன்பது நாள் உலகளாவிய போட்டிகளான இவைப் புதிதாகத் திறக்கப்பட்ட, அதிநவீன “மோண்டோ’ ஓடுதளத்தில் நடைபெறும் முதல் பெரிய போட்டிகளாகும்.

இதில் 104 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்பதால், போட்டி அமைப்பாளர்கள் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ஜவஹர்லால் நேரு மைதானம்

ஜவஹர்லால் நேரு மைதானம்

இந்நிலையில் மைதான வளாகத்திற்குள்ளேயே நுழைந்த இரண்டு தெரு நாய்கள், கென்ய நாட்டு அதிகாரி ஒருவரை மைதானத்திற்குள் வைத்தே கடித்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

சர்வதேச வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கூடியிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வின்போது, மைதான வளாகத்திற்குள்ளேயே இச்சம்பவம் நிகழ்ந்திருப்பது பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com