ஆசிய வரலாற்றில் முதல்முறையாக இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தான்; வெற்றி யாருக்கு? | who will win asia cup 2025 india and pakistan first time final clash

Share

5 ஃபைனல்ஸ் – பாகிஸ்தான் 3, இந்தியா 2!

அதற்கு முன்புவரை இரு அணிகளும், பென்சன் & ஹெட்ஜெஸ் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் (1985), ஆஸ்திரேலிய – ஆசிய கோப்பை (1986, 1994), டி20 உலகக் கோப்பை (2007) என நான்கு முறை இறுதிப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன.

அதில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலா இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கின்றன.

2012 இருதரப்பு தொடருக்குப் பிறகு, இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய சாம்பியன்ஸ் டிராபி (2017) இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியா - பாகிஸ்தான் - 2017 சாம்பியன்ஸ் டிராபி

இந்தியா – பாகிஸ்தான் – 2017 சாம்பியன்ஸ் டிராபி

அதற்குப் பிறகு எந்தவொரு தொடரிலும் இரு அணிகளும் நேருக்கு நேர் இறுதிப் போட்டியில் மோதவில்லை. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஆசிய கோப்பை வரலாறே தனி.

1984 முதல் நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில், இந்தியா 8 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பை வென்றிருக்கிறது.

41 ஆண்டுகளாக இது நடைபெற்று வந்தாலும் இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருமுறைகூட நேருக்கு நேர் இறுதிப் போட்டியில் மோதியதில்லை, இதுதான் முதல்முறை.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com