Rohit: லாய்ட், பாண்டிங், தோனி… எலைட் லிஸ்டில் ரோஹித் – ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ஹிட்மேன் |rohit sharma becomes fourth captain to receive POTM in ICC finals

Share

அதிக ஐ.சி.சி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்!

இந்த வெற்றியின் மூலம், அதிக ஐ.சி.சி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில், 2007, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2013, 2025 சாம்பியன்ஸ் டிராபி என 4 ஐ.சி.சி கோப்பைகளுடன் ரோஹித் முதலிடம் பிடித்திருக்கிறார். இவரோடு, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, 2013, 2025 சாம்பியன்ஸ் டிராபி என 4 ஐ.சி.சி கோப்பைகளுடன் கோலி முதலிடத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

கோலி, ரோஹித்

கோலி, ரோஹித்
https://x.com/BCCI

இவர்களுக்கு அடுத்த இடத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐ.சி.சி கோப்பைகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஜடேஜாவும் மூன்று ஐ.சி.சி கோப்பைகளை வென்ற அணிகளில் இடம் பிடித்து தோனியுடன் இரண்டாமிடத்தைப் பகிர்ந்திருக்கிறார். அதேசமயம், உலக அளவில் அதிக ஐ.சி.சி கோப்பைகளை வென்றவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்குக்கு (5) அடுத்த இடத்தை 8 ஆஸ்திரேலிய வீரர்களுடன் ரோஹித்தும், கோலியும் பகிர்ந்திருக்கின்றனர்.

இவை தவிர, தொடர்ச்சியாக நான்கு ஐ.சி.சி தொடர்களின் (2023 WTC, 2023 ODI CWC, 2024 T20 WC, 2015 CT) இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் கேப்டன் என்ற சாதனையையும் ரோஹித் படைத்திருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com