அதிமுக: எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா – செங்கோட்டையன் விளக்கம்

Share

செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் புறக்கணித்தது, தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில் இன்றிரவு (பிப்ரவரி 12) கோபியில் நடந்த எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செங்கோட்டையன், முதலில் 250 பேர்களின் பெயர்களை வாசித்தார். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை இறுதிவரை அவர் சொல்லவேயில்லை.

மாறாக, கழகப்பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் கட்டளைப்படி இந்த கூட்டம் நடக்கிறது என்று மட்டும் சொன்னார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பெரும்பாலான நேரம், எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் பற்றியே அவரது பேச்சு இருந்தது. அவர்கள் இருவருடனும் தனக்கிருந்த அரசியல் நெருக்கத்தையும், அவர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் பற்றி பேசினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com